About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 13 September 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 145

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 145
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 7

ந ப⁴யம்‌ க்வசிதா³ப் நோதி
வீர்யம் ‌தேஜஸ்² ச விந்த³தி|
ப⁴வத்ய ரோகோ³ த்³யுதிமாந்
ப³லரூப கு³ணாந்வித:||


கு³ணாந்வித: - கு³ணாந்விதஹ

அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும், பெரும் சக்தியையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பான். நோய் ஒருபோதும் அவனைப் பீடிக்காது. நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள், குணநலன்கள் ஆகியன அவனுடையவை ஆகின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.9 

யஜ்ஞார் தா²த் கர்மணோந் யத்ர 
லோகோயம் கர்ம ப³ந்த⁴ந:|
தத³ர் த²ம் கர்ம கௌந்தேய 
முக்த ஸங்க³: ஸமாசர||

  • யக்ஞ அர்தா²த் - யாகத்திற்காக மட்டும் செய்யப்படும் 
  • கர்மண - செயல்கள் 
  • அந்யத்ர - மற்றபடி  
  • லோக - உலகம் 
  • அயம் - இந்த 
  • கர்ம ப³ந்த⁴நஹ - செயல்களினால் பந்தப்படுதல் 
  • தத்³ - அவரது 
  • அர்த²ம் - திருப்திக்காக 
  • கர்ம - செயல்  
  • கௌந்தேய - குந்தியின் மகனே 
  • முக்த ஸங்க³ஸ் - இணைப்பிலிருந்து விடுதலையடைந்து 
  • ஸமாசர - பக்குவமாகச் செய்

குந்தியின் மகனே! வேள்விக்காக செய்யப்படாத வினைகள் மனிதனை பந்தப்படுத்தும். ஆகையால் வேள்விக்கான வினையை பற்றின்றி செய்வாய். வேள்வி என்பது இறைவனுக்குகந்த பொது நல வினைகள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் - 1.5.2

நாரத³ உவாச!
பாராஸ²ர்ய மஹாபா⁴க³ 
ப⁴வத: கச்சிதா³த்மநா|
பரிதுஷ்யதி ஸா²ரீர  
ஆத்மா மாநஸ ஏவ வா||

  • மஹா பா⁴க³ - பெரும் பாக்கியத்தை உடைய 
  • பாராஸ²ர்ய - பராசர புத்திரரே 
  • ப⁴வதஹ் - தங்களது 
  • ஸா²ரீர - சரீர ஸம்பதமானதும் 
  • மாநஸ ஏவ - மானசீகமானதும் ஆன 
  • ஆத்மா - ஆத்மா 
  • ஆத்மநா வா - சரீரத்தாலோ மரத்தாலோ 
  • பரிதுஷ்யதி கச்சித்³ - சந்தோஷம் அடைந்ததாக இருக்கிறதா

நாரதர் சொல்கிறார். பெரும் பாக்கியத்தை உடைய பராசர குமாரரே! தங்களது உடலைப் பற்றியதும் மனத்தைப் பற்றியதுமான ஆத்மா, உடல், மனம் இருவழிகளிலும் மகிழ்ச்சியாக உள்ளதா?  நீங்கள் அனைத்து வழிகளிலும் நலமாக இருக்கிறீர்களா? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.80

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.80

த³ர்ஸ²யா மாஸ சாத் மாநம் 
ஸமுத்³ர: ஸரிதாம் பதி:|
ஸமுத்³ரவ சநாச் சைவ 
நலம் ஸேதும் அகாரயத்|| 

  • ஸரிதாம் - நதிகளுக்கு 
  • பதிஹி - பதியான 
  • ஸமுத்³ரவ ச - ஸமுத்திர ராஜனும் 
  • ஆத்மாநம் -  நிஜ ரூபத்தை 
  • த³ர்ஸ²யா மாஸ -  தோற்றுவித்தான் 
  • ஸமுத்³ர - ஸமுத்திர ராஜன் 
  • வசநாத் - சொன்ன 
  • ஏவ -  பிரகாரமே 
  • நலம் -  நளனைக் கொண்டு 
  • ஸேதும் ச -  அணையையும் 
  • அகாரயத் - அமையச் செய்தார் 

அப்போது, ஆறுகளின் தலைவனான ஸமுத்திரன், தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். ஸமுத்திரனின் சொல்லின் படி, நளன் கடலின் மீது ஒரு பாலத்தை அமைத்தான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 121 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 121 - கஞ்சனை மாளப் புரட்டியவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்

இருட்டிற் பிறந்து போய்* ஏழை வல்ல் ஆயர்* 
மருட்டைத் தவிர்ப்பித்து* வன் கஞ்சன் மாளப் புரட்டி* 
அந்நாள் எங்கள்* பூம்பட்டுக் கொண்ட* 
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • இருட்டில் - இருள் நிறைந்த நடு நிசியில்
  • பிறந்த - மதுரையிலே தேவகீ புத்ரனாகத் தோன்றி
  • போய் - அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப் போய்
  • ஏழை - அவிவேகிகளான
  • வல் - கிருஷ்ண ஆஸ்ரயத்தால் -தன்னைப் பற்றி யிருக்கும் மன வலிமையை யுடைய
  • ஆயர் - இடையர்களின்
  • கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
  • கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற
  • மருட்டை - மருள் வார்த்தைகளை
  • தவிர்ப்பித்து - போக்கினவனாயும்
  • வல் கஞ்சன் - கொடிய கம்ஸன்
  • மாள - மாண்டு போம்படி
  • புரட்டி - அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப் புரட்டினவனாயும்
  • அந் நாள் - நாங்கள் யமுனையில் நீராடிய அக் காலத்திலே
  • எங்கள் - எங்களுடைய
  • பூம் பட்டு - அழகிய பட்டுப் புடவைகளை
  • கொண்ட - வாரிக் கொண்டு போன
  • அரட்டன் - தீம்பனாயுமுள்ள கண்ணன்
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

இருள் சூழ்ந்த வேளையில் தேவகியின் வயிற்றில் திருவவதரித்து, இரவோடிரவாக ஆயர்பாடிக்குச் சென்று, அங்குள்ள ஆயர்களின் பயத்தைப் போக்கி, கொடியவனான கஞ்சனை அடித்துக் கொன்று, அன்றொரு நாள் யமுனையில் நீராடும் போது எங்களுடைய அழகிய பட்டு சேலைகளை அபகரித்த குறும்பனான கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 037 - திருமணிக்கூடம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

037. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1288 - 1297 - நான்காம் பத்து - ஐந்தாம் திருமொழி

------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
சேராது முன் செய்த தீ வினை பின் செய்ததுவும்*
வாராது இனி நீ மட நெஞ்சே நேராக்*
குருமணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை*
திரு மணிக் கூடத்தானைச் செப்பு*

  • மடம் நெஞ்சே – அறியாமையை உடைய எனது மனமே!
  • நேரா – எதிர்த்து
  • குரு மணி கூடத்து – சிறந்த இரத்தினங்கள் இழைத்துச் செய்யப் பெற்ற கூடத்தில் இருந்த
  • ஆனை – குவலயா பீடம் என்னும் பட்டத்து யானையினது
  • கொம்பு – தந்தங்களை
  • பறித்தானை – வேரோடு பிடுங்கி அதனால் அதனை அடித்து அழித்தவனும்
  • திருமணிக்கூடத்தானை – திருமணிக்கூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமாகிய திருமாலை
  • நீ செப்பு – நீ இடைவிடாது துதி செய்ய உதவுவாய். அவ்வாறு செய்வாயாயின்
  • முன்செய்த தீ வினை – நீ முற்பிறப்பில் செய்து சேர்த்து வைத்துள்ள ஸஞ்சிதம் அநப்யுபகத ப்ராப்தம் என்ற இரண்டு வகைப் பாவமும்
  • சேராது – தன் பயனை ஊட்டுமாறு உன்னை அணுகாது
  • பின்செய்வதுவும் – இனி அபுத்தி பூர்வகமாகச் செய்கின்ற ஆகாம்யம் எனப்படும் பாவமும்
  • இனி வாராது – இனிமேல் உன்னை அணுகாது  


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 34

ஸ்கந்தம் 03

த்யான யோகம் - 1

பக்தி யோகத்தை ஐயம் திரிபற விளக்கிய கபில பகவான், தேவஹூதியைப் பார்த்து மேலும் சொன்னார்.

அம்மா! நீங்கள் ஓர் அரசகுமாரி. தங்களுக்கு இப்போது த்யான மார்கம் பற்றிச் சொல்கிறேன்.

த்யானம் என்பது ஏதாவது ஒரு உருவத்தைத் தொடர்ந்து மனத்தில் நினைப்பது.

இதற்கு யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணை, த்யானம், ஸமாதி என்று எட்டு படிகள் உண்டு.

தன் சக்திக்கேற்ப வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தல், தன் வர்ணாஸ்ரமத்திற்கு ஒவ்வாத கர்மங்களைத் தவிர்த்தல், இறையருளால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்தல், சான்றோர்களின் திருவடியை அண்டி நிற்றல், அறம், பொருள், இன்பம் இவற்றைப் பெரிதாக எண்ணி அவற்றிற்காகப் பெருமுயற்சி கொள்ளாதிருத்தல், (அதாவது உலகியல் சுகங்களிலேயே எப்போதும் உழலாமை), முக்திநெறிக்கு அழைத்துச் செல்லும்‌ செயல்களில் ஈடுபாடு, மிகத் தூய்மையான உணவு ஏற்றல், (இரண்டு பாகம் அன்னம், ஒரு பாகம்‌நீர், ஒரு பா‌கம் காற்று உலாவ இடம்), மக்கள் நடமாட்டம்‌ அதிகமற்ற பாதுகாப்பான இடத்தில் தனித்திருத்தல், அஹிம்சை, சத்தியத்தையே பேசுதல், தேவைக்குமேல் பொருள் சேர்க்காதிருத்தல், புலனடக்கத்துடன் ப்ரும்மசர்ய விரதம் ஏற்றல், அறநெறிகளைக் கடைப்பிடிக்கும்போது நேரும் துன்பங்களைப் பொறுத்தல், அறநெறி நூல்களைக் கற்றல், இறையைப் பூஜித்தல் ஆகியவை யமம் மற்றும் நியமத்தில் அடங்கும்.


தூய்மையான ஓரிடத்தில் ஆசனத்தை அமைத்து, அதில் நெடுநேரம் அமர்ந்திருப்பினும் களைப்பு ஏற்படாமல், உடலில் அசைவுகளற்று நேராக இருக்கும்படி அமரவேண்டும். பின்னர் ப்ராணாயாமம் செய்யப் பழகவேண்டும்.

பூரகம், கும்பகம், ரேசகம் என்ற முறையிலோ, அனுலோமம், ப்ரதிலோமம் என்ற முறையிலோ சுவாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இதனால் சித்தம் ஒருநிலைப்படும். காற்று, தீ இவைகளால் காய்ச்சப்பட்ட தங்கம் சுத்தமாவது போல், சுவாசத்தைத் தன்வயப்படுத்தினால் ரஜோகுணமும் அதன் தீமைகளும் அடங்கி மனம் சுத்தமாகும்.

யோகியானவன் ப்ராணாயாமத்தால், வாதம், பித்தம், கபம் போன்றவைகளின் வேறுபாட்டால் உடலில் ஏற்படும் தீமைகளையும், தாரணையால் பாவங்களையும், ப்ரத்யாகாரத்தினால் உலகியல் விருப்பங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும்.

த்யானத்தினால் ராக த்வேஷங்களை ஒழித்து இறைவனிடத்தில் நெருங்க வேண்டும்.

பழங்காலத்தில் பெரிய பணக்காரர்கள், பாதுகாப்பிற்காக, வீட்டுச் சுவர்களில் ஆங்காங்கு தங்கம், நகைகளைப் புதைத்து வைப்பார்கள்.

பிற்காலத்தில் வீட்டை மராமத்து செய்வதற்காக சுவற்றில் எங்கு இடித்தாலும், திடீர் திடீரென்று தங்கக்காசுகளும், நகைகளும் கொட்டும்.

அதுபோல், ஸ்ரீ மத் பாகவதத்தில் 18000 ஸ்லோகங்களில் எந்த ஸ்லோகத்தில் கை வைத்தாலும், அதிலிருந்து ஒரு அற்புதமான பக்தி பாவம், நாம மஹிமை, ஸாது மஹிமை, இறைவனைப் பற்றிய ஒரு செய்தி, ப்ரார்த்தனை, ரூப வர்ணனை என்று கொட்டுகிறது.

மீண்டும் மீண்டும் பகவானின் ரூபவர்ணனை ஏராளமான இடங்களில் வருவதால், ஸ்ரீமத்பாகவத பாராயணமும், கதா ச்ரவணமுமே த்யானத்தின் பலனைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீமத்பாகவத்தின் சிறப்பே அதுதான். த்யான யோகத்தின் 6 படிகளைப் பற்றிச் சுருங்கச் சொன்ன கபிலர், த்யானம் செய்யவேண்டிய ரூபத்தை 21 ஸ்லோகங்களில் மிக விரிவாக வர்ணிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 144

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 144
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 6

யஸ²: ப்ராப்நோதி விபுலம்‌
ஜ்ஞாதி ப்⁴ராதாந்ய மேவ ச|
அசலாம்‌ ஸ்²ரிய மாப்நோதி
ஸ்²ரேய: ப்ராப்நோத்ய நுத்தமம்||


யஸ²: - யஸ²ஃ
ஸ்²ரேய: - ஸ்²ரேயஃ

அவன் பெரும் புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன் மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (அவனுக்கான உயர்ந்த நன்மையான முக்தியையே) அடைவதிலும் வெல்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.8 

நியதம் குரு கர்ம த்வம் 
கர்ம ஜ்யாயோ ஹ்ய கர்மண:|
ஸ²ரீர யாத்ராபி ச தே 
ந ப்ரஸித்³ த்⁴யேத³ கர்மண:||

  • நியதம் - விதிக்கப்பட்ட 
  • குரு - செய்  
  • கர்ம - கடமைகள் 
  • த்வம் - நீ 
  • கர்ம - செயல் 
  • ஜ்யாயோ - சிறந்தது 
  • ஹி - நிச்சயமாக 
  • அகர்மணஹ - செயலற்ற நிலையை விட 
  • ஸ²ரீர - உடலின்  
  • யாத்ரா - பராமரிப்பு 
  • அபி - ஆயினும்  
  • ச - மேலும் 
  • தே - உனது 
  • ந - என்றுமில்லை 
  • ப்ரஸித்³ த்⁴யேத் - நடப்பதில்லை 
  • அகர்மணஹ - செயலின்றி

நியமிக்கப்பட்ட கடமைகளை நீ செய். , செயலற்ற நிலையை விட செயல் சிறந்தது. மேலும், உடலின் பராமரிப்பு ஆயினும் , உனது செயலின்றி நடப்பதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 
         
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் - 1.5.1

ஸூத உவாச!
அத² தம் ஸுக²மாஸீந 
உபாஸீநம் ப்³ருஹச் ச்²ரவா:|
தே³வர்ஷி: ப்ராஹ விப்ரர்ஷிம் 
வீணாபாணி: ஸ்மயந்நிவ||

  • ஸூத உவாச! - ஸூதர் சொல்கிறார் 
  • அத² - பிறகு
  • தம் ஸுக²ம் - நல்ல ஆசனத்தில் சுகமாக
  • ஆஸீந - உட்கார்ந்தவரும்
  • ப்³ருஹச் ச்²ரவாஹா - மிகுந்த கீர்த்தியை உடையவருமான
  • தே³வர்ஷிஃ - நாரத மகரிஷியானவர்
  • வீணாபாணிஸ் - வீணையை கையில் உடையவராய்
  • உபாஸீநம் - சமீபத்தில் அமர்ந்திருக்கும்
  • விப்ரர்ஷிம் - வ்யாச பகவானை பார்த்து 
  •  ஸ்மயந் இவ - சிறிது சிரித்துக் கொண்டே
  • ப்ராஹ - சொன்னார்

ஸூதர் கூறுகிறார் 
மிக்க புகழ் பெற்ற வீணாபாணியான நாரத மகரிஷி, அமைதியாக ஆசனத்தில் அமர்ந்து, அருகில் அமர்ந்துள்ள அந்தண சிரேஷ்டராகிய வியாச முனிவரிடம் சிறிது புன்னகையுடன் வினவினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.79

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.79

தத: ஸுக்³ரீவ ஸஹிதோ 
க³த்வா தீரம் மஹோத³தே⁴:|
ஸமுத்³ரம் க்ஷோப⁴யா மாஸ 
ஸ²ரைரா தி³த்ய ஸந்நிபை⁴:|| 

  • ததஸ் - அதன் மேல் 
  • ஸுக்³ரீவ ஸஹிதோ -  ஸுக்ரீவரோடு கூடினவராய் 
  • மஹோத³தே⁴ஹே - ஸமுத்திரத்தினுடைய 
  • தீரம் -  கரையை 
  • க³த்வா -  அடைந்து 
  • ஆதி³த்ய - ஸூரியனுக்கு 
  • ஸந்நிபை⁴ஹி - நிகரான 
  • ஸ²ரைரா -  பாணங்களால் 
  • ஸமுத்³ரம் -  ஸமுத்திரத்தை 
  • க்ஷோப⁴யா மாஸ -  கலக்கினார் 

அதன் பிறகு ராமர், ஸுக்ரீவனுடன் பெருங்கடலுக்குச் சென்று, ஆதித்யனுக்கு {சூரியனுக்கு} ஒப்பான கணைகளால் சமுத்திரத்தைக் கலங்கடித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 120 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 120 - குழலூதும் வித்தகன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

காயும் நீர் புக்குக்* கடம்பு ஏறி* 
காளியன் தீய பணத்திற்* சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி* 
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற* 
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • காயும் - கொதிக்கின்ற (காளியனுடைய விஷாக்நியால்) 
  • நீர் - மடுவின் ஜலத்திலே
  • புக்கு - புகுந்து (கலக்கி) (அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
  • கடம்பு ஏறி - அம் மடுவின் கரையிலிருந்த கடம்ப மரத்தின் மேலேறி
  • காளியன் - அந்தக் காளியனுடைய
  • தீய பணத்தில் - கொடிய படத்திலே
  • சிலம்பு ஆர்க்க - தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த சிலம்பு சப்திக்கும்படி
  • பாய்ந்து - குதித்து
  • ஆடி - கூத்தாடி (இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)
  • வேயின் குழல் ஊதி - மூங்கினாலானாகிய குழலை ஊதி
  • வித்தகன் ஆய் நின்ற - இப்படி விஸ்மயநீயனாயிருந்த
  • ஆயன் - கண்ண பிரான்
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

அன்று கொதிக்கும் மடுவின் நீரில் புகுந்து கடம்ப மரத்தின் மேலேறி, காளியன் என்கிற கொடிய பாம்பின் படமெடுத்த தலை மீது குதித்து தன் திருவடியில் அணிந்திருந்த சலங்கைகள் ஓசை எழுப்பும் படி நடனமாடி, குழலிசைத்து அதிசயமாய் நின்றவன், இன்று ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Friday, 12 September 2025

108 திவ்ய தேசங்கள் - 037 - திருமணிக்கூடம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

037. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ மணிகூட பெருமாள் 
திருவடிகளே சரணம்||


  • பெருமாள் மூலவர்: வரதராஜர்
  • பெருமாள் உற்சவர்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன் 
  • தாயார் மூலவர்: திருமாமகள் நாச்சியார்
  • தாயார் உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி 
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற
  • புஷ்கரிணி: சந்திர 
  • தீர்த்தம்: ப்ரஹ்ம 
  • விமானம்: கனக, ப்ரஸந்த 
  • ப்ரத்யக்ஷம்: பெரிய திருவடி, சந்திரன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


-----------------
ஸ்தல புராணம்

உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு சக்கரமும், முன் கைகளில் அபய, ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்றபடி இடதுகரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீதேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள்பாலிக்கிறாள். அருகிலேயே உற்சவ மூர்த்திகள் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன், "உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,' என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாப விமோசனம் கிடைத்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 88

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 33

ஸ்கந்தம் 03

இறைவனை மகனாகப் பெற்ற தேவஹூதி, குருவிடம் சிஷ்யை கேட்பது போல் கேட்டாள்.

ப்ரும்மத்தை அறிந்த ஞானியாகிய என் ப்ரபுவே! ப்ரக்ருதியும்‌ புருஷனும் ஒன்றையொன்று தழுவிய நித்ய வஸ்துக்கள். ப்ரக்ருதி புருஷனை விட்டுப் பிரிவதே இல்லை.

பூமியும் அதன் குணமான மணமும், நீரும் அதன் தன்மையான சுவையும் எப்படி ஒன்றை விட்டு ஒன்று பிரியாதோ அவ்வாறே ப்ரக்ருதியும் புருஷனும் பிரிவதில்லை.

இயற்கையில் ஆன்மா செயலற்றதாக இருப்பினும் ப்ரக்ருதி அவனைச் செயல்பட வைக்கிறது. ப்ரக்ருதியோடு சம்பந்தம்‌ உள்ளவரை ஆன்மாவிற்குச் சுதந்திரம்‌ இல்லையே. பிறகு எப்படி விடுபடும்? என்றாள்.

பகவான் சிரித்தார். பின்னர் கூறலானார்.


அம்மா! அக்னியை உண்டாக்க அரணிக் கட்டையைக் கடைவது வழக்கம். அக்னியானது தான் தோன்றக் காரணமாயிருக்கும் அரணிக் கட்டையையே எரித்து விடும்.

விறகடுப்பை எரிக்க ஒரு குச்சியைப் பயன்படுத்துவோம். அந்தக் குச்சியால், மற்ற விறகுகளை அடுப்பில் தள்ளுவோம். கடைசியில் இவ்வளவு நேரமாக அடுப்பை எரிக்கப் பயன்படுத்திய குச்சியும் அடுப்பினுள்ளேயே போடப்பட்டு எரிந்து போகும்.

ப்ரக்ருதியால் உண்டாக்கப்பட்ட புத்தி, மனம், இந்திரியங்கள்‌ ஆகியவை ப்ரக்ருதியை எரித்து விடும்.

எப்படி என்றால், ஸ்வதர்மத்தை, அதாவது தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட கர்மத்தை ஒருவன் பலனை எதிர்பார்த்துச் செய்யாமல், பகவத் அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மனத்தூய்மை ஏற்படும். அதனால், இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய கதைகளில் ஊக்கம் ஏற்படும். அதனால் தீவிரமான பக்தி ஏற்படும். அதன் மூலம் தத்துவத்தை உணரும் அறிவும் திடமான வைராக்யமும், சித்தம் ஒருமைப்படுவதால், புருஷனுடைய அறியாமை நாளடைவில் குறைந்து கொண்டே வந்து பின்னர் முற்றிலும் அழிந்து விடும்.

கனவில் வரும் பற்பல துன்பங்களால் கனவில் மிகவும் கஷ்டப்படுகிறான். விழித்துக் கொண்ட பின்னர், கனவில் வந்த கஷ்டங்கள் அவனைப் பாதிக்கவில்லை என்று உணர்கிறான்.

அது போல் உண்மை நிலையை உணர்ந்தவனை ப்ரக்ருதியால் சம்சார பந்தத்தில் சிக்க வைக்க முடியாது.

இவ்வாறு ஒருவன் பற்பல பிறவிகள் தோறும் பகவானான என்னைப் பற்றிய நினைவாகவே வெகுகாலம்‌ இருப்பானாகில், அவனுக்கு ப்ரும்ம லோகம் உள்பட அனைத்து போகங்களிலும் வெறுப்பு தோன்றி வைராக்யம்‌ சித்திக்கும்.

அம்மா! வைராக்யம்‌ கை வரப் பெற்ற என் பக்தன் மிகுந்த துணிவுடையவன் ஆகிறான். என் கருணையினால், தத்வங்கள் அனைத்தின் ஸாரமான காண்பதனைத்தும் பொய், இறைவனே சத்யம் என்ற அனுபவத்தைப் பெற்றுகிறான். அவனது அத்தனை சந்தேகங்களும்‌ நீங்கப் பெறுகிறான்.

தேகமே ஆன்மா என்ற அபிமானம் அவனை விட்டொழியும். சூக்ஷ்ம உடலை விட்டு யோகிகள் எப்படி திரும்பி வர இயலாத இடத்தை அடைகிறார்களோ, அதே இடத்தை என் பக்தன் அடைகிறான். அவ்விடம் கைவல்யம் எனப்படும் ஆனந்த வடிவான என் உலகமே ஆகும்.

அஷ்டமா சித்திகளும் கடினமான யோக சாதனையால்‌ மட்டுமே கை கூடும். வேறு சாதனைகளால் அவற்றை அடைய முடியாது. ஆனால், பக்தி யோகம்‌ கூடியவனுக்கு அணிமாதி சித்திகள் தானே கை கூடும். அவை மாயையே உருவானவை. ஆகவே மனத்தைத் தன்பால் இழுத்து விடும். உலகியல் தளைகளை மேன்மேலும் தோற்றுவிக்கும். அவைகளில் பற்று வைப்பவர்கள் மீளவே இயலாத சம்சாரக் கடலில் விழுந்து விடுகிறார்கள்.

பக்தி யோகம் கை வரப் பெற்றவர் அவற்றில் மனம் வைக்காமல் இருப்பாராயின், உலகியல் பற்றுக்கள் விடுபட்டு, உடலின் தொடர்பு நீங்கி, மரணபயமற்ற ஆனந்தமே வடிவான என் பரமபதத்தை அடைந்து விடுகிறார். இதற்குச் சிறந்த உதாரணம்..

குருவிடம் பக்தி செலுத்திய கனிகண்ணன் கிழவியைக் குமரியாக்கினார். ஆனால், அந்த சித்தியில் மயங்காமல், குருவருளால் நிகழ்ந்ததென்று அர்ப்பணம் செய்தார். அந்த கனிகண்ணன் ஊரை விட்டுப் போனால், அவர் பின்னால், குருவான திருமழிசை ஆழ்வாரும், பகவானும், காஞ்சியில் இருக்கும் தெய்வங்களும் நடந்து போகிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்