About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 30 March 2025

ஓராண்வழி ஆசார்யர்கள்

 ||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஓராண்வழி ஆசார்யர்கள்

1. ஸ்ரீ பெரிய பெருமாள்

  • அவதரித்த நாள் - பங்குனி மாதம் - ரோஹிணி நக்ஷத்திரம்
  • அருளிச் செய்தவை - பகவத் கீதை, ஸ்ரீ ஸைலேச தயாபாத்ரம் தனியன்


2. ஸ்ரீ பெரிய பிராட்டியார்

  • அவதரித்த நாள் - பங்குனி மாதம் - உத்திரம் நக்ஷத்திரம்
  • ஆசார்யன் - பெரிய பெருமாள்


3. ஸ்ரீ ஸேனை முதலியார் 
(விஷ்வக்ஸேநர்)

  • அவதரித்த நாள் - ஐப்பசி மாதம் - பூராடம் நக்ஷத்திரம்
  • ஆசார்யன் - பெரிய பிராட்டியார்
  • அருளிச் செய்தவை - விஷ்வக்ஸேன ஸம்ஹிதை


4. ஸ்ரீ நம்மாழ்வார்

  • அவதரித்த நாள் – வைகாசி மாதம் - விசாகம் நக்ஷத்திரம்
  • அவதார ஸ்தலம் – திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
  • அம்சம் - ஸேனை முதலியார்
  • ஆசார்யன் – ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - திருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்), திருவாசிரியம் (யஜுர் வேத ஸாரம்), பெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்), திருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்)


5. ஸ்ரீமந் நாதமுனிகள்

  • அவதரித்த நாள் - ஆனி மாதம் - அநுஷம் நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்)
  • ஆசார்யன் – நம்மாழ்வார்
  • அருளிச் செய்தவை - நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன், கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள், திருவாய்மொழி தனியன்


6. ஸ்ரீ உய்யக் கொண்டார் 
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)

  • அவதரித்த நாள் - சித்திரை மாதம் - க்ருத்திகை நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - திருவெள்ளறை
  • ஆசார்யன் - நாதமுனிகள்
  • அருளிச் செய்தவை - திருப்பாவை தனியன்கள்


7. ஸ்ரீ மணக்கால் நம்பி

  • அவதரித்த நாள் - மாசி மாதம் - மகம் நக்ஷத்திரம் 

  • அவதார ஸ்தலம் - மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே காவிரி நதிக்கரையில் இருக்கும் கிராமம்)
  • ஆசார்யன் - உய்யக் கொண்டார்
  • அருளிச் செய்தவை - பெருமாள் திருமொழி தனியன்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


8. ஸ்ரீ ஆளவந்தார் 
(நாதமுனியின் பேரன்)

  •  அவதரித்த நாள் - ஆடி மாதம் - உத்திராடம் நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - காட்டு மன்னார் கோவில்
  • ஆசார்யன் - மணக்கால் நம்பி
  • அருளிச் செய்தவை - சதுஸ் ஸ்லோகீ, ஸ்தோத்ர ரத்னம், ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம், கீதார்த்த சங்ரஹம், பொது தனியன் - நம்மாழ்வார் 
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் – திருவரங்கம்


9. ஸ்ரீ பெரிய நம்பி 
(ஸ்ரீ பராங்குச தாசர், மஹா பூர்ணர்)

  • அவதரித்த நாள் - மார்கழி மாதம் - கேட்டை நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் – திருவரங்கம்
  • ஆசார்யன் - ஆளவந்தார்
  • அருளிச் செய்தவை - அமலனாதிபிரான் தனியன்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - சோழ தேசத்தில் உள்ள பசுபதி கோவில்


10. ஸ்ரீ ராமாநுஜர் 
(எம்பெருமானார்)

  • அவதரித்த நாள் - சித்திரை மாதம் - திருவாதிரை நக்ஷத்திரம்
  • அவதார ஸ்தலம் - ஸ்ரீ பெரும்பூதூர்
  • ஆசார்யன் - பெரிய நம்பி
  • அருளிச் செய்தவை - ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், ஸரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம், பெருமாள் திருமொழி தனியன், பெரிய திருமொழித் தனியன்கள், பெரிய திருவந்தாதி தனியன், திருவெழுகூற்றிருக்கை தனியன்கள்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


11. ஸ்ரீ எம்பார் 
(எம்பெருமானாரின் இளைய சகோதரர்)

  • அவதரித்த நாள் - தை மாதம் - புனர்பூசம் நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - மதுரமங்கலம்
  • ஆசார்யன் - பெரிய திருமலை நம்பிகள்
  • அருளிச் செய்தவை - விஞ்ஞான ஸ்துதி, எம்பெருமானார் வடிவழகு, பெரிய திருமொழித் தனியன்கள்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


12. ஸ்ரீ பராசர பட்டர் 
(கூரத்தாழ்வானின் திருக்குமாரர்)

  • அவதரித்த நாள் - வைகாசி மாதம் - அநுஷம் நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - எம்பார்
  • அருளிச் செய்தவைஅஷ்ட ஸ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோஸம், பகவத் குண தர்ப்பணம் (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் வியாக்யானம்), ஸ்ரீ ரங்கராஜ ஸ்தோத்ரம், பொது தனியன் - ஆழ்வார்கள் உடையவர், திருப்பாவை தனியன், திருவாய்மொழி தனியன்கள்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


13. ஸ்ரீ நஞ்சீயர்

  • அவதரித்த நாள் - பங்குனி மாதம் - உத்திரம் நக்ஷத்திரம்
  • அவதார ஸ்தலம் - திருநாராயண புரம்
  • ஆசார்யன் - பராசர பட்டர்
  • அருளிச் செய்தவை - திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம்,  திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப்பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


14. ஸ்ரீ நம்பிள்ளை 
(கலிவைரி தாஸர்)

  • அவதரித்த நாள் - கார்த்திகை மாதம் - க்ருத்திகை நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - நம்பூர்
  • ஆசார்யன் – நஞ்சீயர்
  • அருளிச் செய்தவைதிருவாய்மொழி 36000 படி ஈடு வியாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்யானம், திருவந்தாதி வ்யாக்யானங்கள், திருவிருத்தம் வியாக்யானம்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


15. ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை

  • அவதரித்த நாள் - ஆனி மாதம் - ஸ்வாதி நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - நம்பிள்ளை
  • அருளிச் செய்தவை - ஈடு 36000 படி
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


16. ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்
(வடக்குத் திருவீதிப்பிள்ளையின் திருக்குமாரர்)

  • அவதரித்த நாள் - ஐப்பசி மாதம் - திருவோணம் நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - வடக்குத் திருவீதிப் பிள்ளை
  • அருளிச் செய்தவை - யாத்ருச்சிக படி, ஸ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஸேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி, ப்ரமேய ஸேகரம், ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)


17. ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை

  • அவதரித்த நாள் - வைகாசி மாதம் - விசாகம் நக்ஷத்திரம்
  • அவதார ஸ்தலம் - குந்தீ நகரம் (கொந்தகை)
  • ஆசார்யன் - பிள்ளை லோகாசார்யர்
  • அருளிச் செய்தவை - பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதேஸம்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி


18. ஸ்ரீ அழகிய மணவாள மாமுநிகள்

  • அவதரித்த நாள் - ஐப்பசி மாதம் - மூலம் நக்ஷத்திரம் 
  • அவதார ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
  • ஆசார்யன் - திருவாய்மொழிப் பிள்ளை
  • அருளிச் செய்தவை - தேவராஜ மங்களம், யதிராஜ விம்ஸதி, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம், திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள்                                                வ்யாக்யானங்கள்: முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீ வசனபூஷணம், ஆசார்ய ஹ்ருதயம், பெரியாழ்வார் திருமொழி (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களில் இருந்து கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும்), இராமானுச நூற்றந்தாதி. ப்ரமாண திரட்டு (ஒரு கிரந்தத்தைச் சார்ந்த அனைத்து ஸ்லோகங்கள் மற்றும் ஸாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்): ஈடு 36000 படி, ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், தத்வ த்ரயம், ஸ்ரீ வசன பூஷணம்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||