About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 28 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 51

த⁴ர்ம கு³ப்³ த⁴ர்ம க்ருத்³ த⁴ர்மீ
ஸத³ க்ஷரம ஸத்க்ஷர மக்ஷரம்|
அவிஜ் ஞாதா ஸஹஸ் ராம் ஸு² ர்
விதா⁴தா க்ருத லஷண:||

  • 476. த⁴ர்ம கு³ப்³ - தர்மத்தைப் பாதுகாப்பவர்.
  • 477. த⁴ர்ம க்ருத்³ - தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்.
  • 478. த⁴ர்மீ - தர்மமே வடிவானவர். தர்மத்தைச் சுமக்கிறார்.
  • 479. ஸத்³ - நல்லதாகவே உள்ளவர். பாராட்டுக்குரியவர். நித்யமானவர்.
  • 480. ஸதக்ஷரம் அக்ஷரம் ஸத் இருப்பு எந்த வகையிலும் குறையாமலும், அழியாமலும் இருப்பவர். எல்லாக் காலத்தும் நிறைவோடு இருப்பவர். கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர். நல்லதை ஒரு போதும் கைவிடாதவர்.
  • 481. அஸத் அபரப் பிரம்மம். தர்மத்தைப் பின்பற்றாதவர்களுக்கும், பாவச் செயல்களைச் செய்பவர்களுக்கும் துக்கத்தைக் கொடுப்பவர்.
  • 482. க்ஷரம் - கெட்டதை விட்டு விலகுகிறார். 
  • 483. அவிஜ் ஞாதா - அடியார்களிடம் தவறுகளை அறியாதவர். உண்மையாக ஈடுபடும் பக்தர்களின் குறைகளை அவர் அறிவதில்லை.
  • 484. ஸஹஸ் ராம் ஸு² ர் - எல்லையில் ஞானத்தர். பிரகாசத்தில் சூரியனை மிஞ்சும் எண்ணற்ற கதிர்களை (அறிவு) உடையவர். அவர் சூரியனுக்குப் பின்னால் உள்ள சக்தி.
  • 485. விதா⁴தா - விதிப்பவர். கட்டளையிடுபவர். உச்சக் கட்டுப்பாட்டாளர். 
  • 486. க்ருத லக்ஷணஹ - சங்கு சக்கரம் முதலான அடையாளங்களை உடையவர். பக்திமான்களுக்கான தனித்தன்மைகளை அவர் வகுத்துள்ளார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment