||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பிரத்யும்னனின் பிறப்பிற்கான காரணம்|
கிருஷ்ணர் ருக்மிணியுடன் துவாரகை சென்று அவருடைய பெற்றோரிடம் கேட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு, ருக்மிணியை மனம் முடிக்க தயாரானர். அங்கு அவளை வேத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தக்ஷன் யகத்தில் சக்தி எப்படி இறந்தாள் என்று எல்லோருக்கும் தெரியும், அதன் பிறகு சிவன் இமயமலைப் பிரதேசத்தில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்துவிட்டார். இதற்கிடையில், சக்தி இமவானின் மகள் பார்வதியாக பிறந்தாள். சிவப்பெருமானைத் தான் மணம் புரிவது என்று அவள் உறுதியாக இருந்தாள். அதனால் அவள் தவம் செய்துக் கொண்டிருந்த சிவனுக்குத் தொண்டு செய்ய ஆரம்பித்தாள். ஆனால் கண்களையே திறக்காத சிவன் அவளைக் கவனிக்கவேயில்லை.
ஆனால் சிவன் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்குப் பிறக்கும் முருகக்கடவுள் தங்களுக்குச் சேனாதிபதியாக இருக்க வேண்டும் என்றும் தேவர்கள் விரும்பினார்கள். அதனால் இந்திரன் காமதேவனான மன்மதனை வரவழைத்துச் சிவபெருமானின் தவத்தைக் கலைக்கும்படி கட்டளையிட்டான். மன்மதன் தன் மலரம்புகளால் சிவனைத் தாக்கினான்.
சிவனுடையத் தவம் கலைந்தது. அவர் மெல்லக் கண்களைத் திறந்துப் பார்த்தார். எதிரே பார்வதி நின்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய பக்தியை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. தமது தவம் கலைக்கப்பட்டதைக் குறித்து அவர் மிகவும் கோபமாக இருந்தார். திரும்பிப் பார்த்தல் மன்மதன் நடுங்கிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான். சிவம் தம் நெற்றிக் கண்ணைத் திறந்தவுடன் மன்மதன் எரிந்து சாம்பலானான்.
மன்மதனின் மனைவி ரதி சிவனிடம் ஓடி வந்து, கதறி அழுதாள். தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சிவனிடம் கெஞ்சினாள். சிவன் அவள் மீது இரக்கம் கொண்டு, மன்மதனைப் பிழைக்க வைத்தார். "ஆனால் அவன் உன்னுடைய கண்ணுக்கு மட்டும் தான் தெரிவான்" என்று ரதியிடன் சொன்னார்.
"இறைவா, என் கணவருக்கு இனி உருவமே கிடையாதா? என்று ரதி கேட்டாள். சிவன் சற்று நேரம் யோசித்து, "கவலைப்படாதே, அவன் கிருஷ்ணரின் மகனாகப் பிறப்பான். நீ சம்பராசுரன் என்னும் அசுரன் வீட்டில் வேலைக்காரியாக இருப்பாய். நீங்கள் இருவரும் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் அங்கு ஒன்று சேர்வீர்கள்" என்று சொன்னார். ரதியும் மகிழ்ச்சியுடன் தன் இருப்பிடம் திரும்பினாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment