||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 63 - என்றும் துன்பம் நெருங்காது
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மைத்தடங் கண்ணி*
யசோதை தன் மகனுக்கு*
இவை ஒத்தன சொல்லி*
உரைத்த மாற்றம்*
ஒளி புத்தூர் வித்தகன் விட்டுசித்தன்*
விரித்த தமிழிவை*
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு*
இடரில்லையே! (2)
- மை - கருத்த மை அணிந்த
- தட - விசாலமான பெரிய
- கண்ணி - கண்களை உடையவளான
- அசோதை - யசோதையானளவள்
- தன் மகனுக்கு - தன் மகனான கண்ணனின்
- ஒத்தன சொல்லி - மனதிற்கு ஏற்றவாறு கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாய சக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம்
- உரைத்த - சந்திரனை நோக்கிச் சொன்ன
- இவை மாற்றம் - இப்பாசுரத்தை
- ஒளி - ஒளி பொருந்திய
- புத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
- வித்தகன் - ஸமர்த்தரான
- விட்டுசித்தன் - பெரியாழ்வாராலே
- விரித்த - விரித்து அருளிச் செய்யப்பட்ட
- தமிழ் - இந்த தீந்தமிழ்
- இவை - இப்பாசுரங்கள் பத்தையும்
- எத்தனையும் - ஏதேனும் ஒரு வகையில்
- சொல்லவல்லவர்க்கு - மனமாற சொல்பவர்களை
- இடர் இல்லை - எந்த துன்பமும் தீண்டாது
அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின் மனதிற்கு ஏற்றவாறு, சந்திரனை நோக்கி , கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாய சக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம் மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விஷ்ணுசித்தன் (பெரியாழ்வார்) விரிவாய் எடுத்து உரைத்திருக்கிறார். இந்த தீந்தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் ஏதேனும் ஒரு வகையில் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.
அடிவரவு: தன் என் சுற்றும்* சக்கரம் அழகிய தண்டு* பாலகன் சிறியன்* தாழி மைத்தட – உய்ய
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment