||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 48
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்²ச
க்ரது: ஸத்ரம் ஸதாங்க³தி:|
ஸர்வ த³ர்ஸீ² விமுக்தாத்மா
ஸர்வ ஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்||
- 446. யஜ்ஞ - யாகமாக உள்ளவர். அனைத்து வகையான யக்ஞங்களின் உருவகமானவர். அவர் அனைத்து தேவர்களையும் தனது யாகத்தால் மகிழ்வித்து வளர்க்கிறார்.
- 447. இஜ்யோ - யாகத்தால் வழி படத்தக்கவர். மரியாதைக்குரியவர்.
- 448. மஹேஜ்யஸ்²ச - பிற தெய்வங்களின் சிறந்த வழிபாட்டையும் ஏற்பவர்.
- 449. க்ரதுஸ் - செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவர். அனைத்து செயல்களுக்கும் பின்னால் உள்ள சக்தி.
- 450. ஸத்ரம் - ஸ்திரரூபியானவர். ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவர். பக்தியுள்ளவர்களையும் நேர்மையாளர்களையும் பாதுகாக்கிறார்.
- 451. ஸதாம் கதிஹி - சாதுக்களுக்கு அடையத் தக்கவர்.
- 452. ஸர்வ த³ர்ஸீ² - எல்லாவற்றையும் பார்த்து அறிபவர்.
- 453. நிவ்ருத்தாத்மா - எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவர். இயற்கையாகவே விடுதலை பெற்றவர். தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் ஆத்மாவாக இருப்பவர்.
- 454. ஸர்வஜ்ஞோ - தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவர்.
- 455. ஜ்ஞாநம் உத்தமம் - மேலான ஞானமயமானவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment