||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணருக்கு வரவேற்பு|
பலராமர் சீக்கிரமே வந்து கிருஷ்ணரை அடைந்தார். பலராமரும் கிருஷ்ணரும் நந்தவனத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி பீஷ்மகரை எட்டியது. அவர்கள் திருமணத்தைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அவர் நினைத்தார்.
ஆகவே வாத்திய கோஷங்களுடன் அவர்களைச் சந்தித்து, தக்க மரியாதைகளைச் செய்து, அவர்களும் அவர்களுடைய படைகளும் சௌகரியமாகத் தங்க ஏற்பாடுகள் செய்தார். அவரே கிருஷ்ணர்தாம் தம் மாப்பிள்ளை என்று முதலில் மனதில் எண்ணியிருந்தார். இப்பொழுது இன்னொருவர் அந்த இடத்தைப் பிடிக்கப் போவது அவருக்கே பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வார், பாவம்! ஊர் மக்கள் கிருஷ்ணர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். உடனே திருமணத்தில் இருந்த ஆசையெல்லாம் மறந்து, கும்பல் கும்பலாக கிருஷ்ணரைத் தரிசிப்பதும், அவருடைய ஆசிர்வாதங்களைப் பெறுவதுமாக இருந்தார்கள். கிருஷ்ணரின் அழகைக் கண்டு அவர்கள் அப்படியே மோகித்துப் போனார்கள்.
அவர்கள் தங்களுக்குள், "ருக்மிணி தான் கிருஷ்ணருக்குச் சரியான ஜோடி, இத்தனை அழகிய கிருஷ்ணர்தாம் ருக்மிணியை மணக்கத் தகுந்தவர். இருவருக்கும் எத்தனை நல்ல பொருத்தம் உள்ளது! நாங்கள் சிறிதளவாவது புண்ணியம் செய்திருந்தால், அந்தப் புண்ணியத்தின் பலனாய் பகவான் இவர்கள் இருவரையும்தாம் சேர்த்து வைக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment