About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 20 November 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.13

அஷ்டமே மேரு தே³வ்யாம் து 
நாபே⁴ர் ஜாத உருக்ரம:|
த³ர்ஸ²யந் வர்த்ம தீ⁴ராணாம் 
ஸர்வாஸ்²ரம நமஸ்க்ருதம்||

  • அஷ்டமே து - எட்டாவதான அவதாரத்தில்
  • ஸர்வாஸ்²ரம - எல்லா ஆசிரமத்தினராலும்
  • நமஸ்க்ருதம் - வணங்கத்தக்க
  • தீ⁴ராணாம் - வீரர்களின்
  • வர்த்ம - மார்க்கத்தை
  • த³ர்ஸ²யந் - காண்பிக்கின்றவராய்
  • உருக்ரமஹ - உருக்ரமன் என்ற பெயரை உடையவராய்
  • நாபே⁴ர் - நாபியிடத்திலிருந்து
  • மேரு தே³வ்யாம் - மேரு தேவியினிடத்தில் 
  • ஜாத - ரிஷபர் என்ற பெயரை உடையவராய் தோன்றினார்

எட்டவதாக பகவான், நாபியின் மனைவியான மேரு தேவியின் திருவயிற்றில் 'ரிஷப தேவர்' என்ற பெயருடன் திரு அவதாரம் செய்து, நான்கு ஆசிரமத்தில் இருப்பவர்களாலும் கொண்டாடப்படுகின்ற தீரர்களின் மார்க்கமான (பரம ஹம்ஸ) சந்யாஸ தர்மத்தைத் தானே நடத்திக் காட்டினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment