ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 52 - துர்க்கை தந்த பொருள்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
மெய் திமிரும் நானப்*
பொடியொடு மஞ்சளும்*
செய்ய தடங் கண்ணுக்கு*
அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி*
கொண்டுவளாய் நின்றாள்*
ஐயா! அழேல் அழேல் தாலேலோ*
அரங்கத்தணையானே! தாலேலோ!
- மெய் - திருமேனியிலே
- திமிரும் - பூசத் தகுந்த
- நானம் - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய
- பொடியோடு - ஸூகந்தப் பொடிகளையும்
- மஞ்சளும் - மஞ்சள் பொடியையும்
- செய்ய - சிவந்ததாய்
- தட - விசாலமாயுள்ள
- கண்ணுக்கு - கண்களில் சாத்த
- அஞ்சனமும் - மையையும்
- சிந்தூரமும் - திருநெற்றியில் சாத்த ஸிந்தூரத்தையும்
- வெய்ய கலை பாகி - கொடிய ஆண் மானை வாஹனமாக உடைய துர்க்கையானவள்
- கொண்டு - எடுத்துக் கொண்டு வந்து
- உவளாய் நின்றாள் - பணிவன்புடன் நின்றாள்
- ஐயா - ஸ்வாமியான கண்ணனே!
- அழேல் அழேல் தாலேலோ - அய்யனே அழாது கண்ணுறங்கு
- அரங்கத்து - திருவரங்கத்திலே
- அணையானே - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக உடையவனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
திருமேனியில் பூசுவதற்க்காக வாசனை மற்றும் மஞ்சள் பொடிகளையையும், சிவந்து அகந்திருந்த கண்களுக்கு மையையும், நெற்றிக்கு இட சிந்தூரத்தையும் கொண்டு வந்து கண்ணனுக்கு அளிப்பதற்காக அதோ நிற்கிறாள் ஆண் மானை வாகனமாகக் கொண்ட துர்கா தேவி. பெருமானே, அழாதே, அழாதே, கண்ணுறங்கு, ஸ்ரீரங்கத்தில் பாம்பைப் படுக்கையாக உடையவனே கண்ணுறங்கு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment