||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 4
திருமங்கையாழ்வார்
062. திவ்ய ப்ரபந்தம் - 1536 - மனமே! நறையூர் நம்பி தான் தேவ தேவன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
மறை ஆரும் பெரு வேள்விக்* கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்*
நிறை ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
பிறை ஆரும் சடையானும்* பிரமனும் முன் தொழுது ஏத்த*
இறை ஆகி நின்றான் தன்* இணை அடியே அடை நெஞ்சே|
063. திவ்ய ப்ரபந்தம் - 1537 - தேவர்களாகி வாழ்வர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல் இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே|
064. திவ்ய ப்ரபந்தம் - 1538 - திருமாலின் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கிடந்த நம்பி குடந்தை மேவிக்* கேழல் ஆய் உலகை இடந்த நம்பி*
எங்கள் நம்பி* எறிஞர் அரண் அழிய*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|
065. திவ்ய ப்ரபந்தம் - 1539 - உலகளந்தான் திருப்பெயர் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
விடம் தான் உடைய அரவம் வெருவச்* செருவில் முன நாள்*
முன் தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு* மிக்க தாள் ஆளன்*
இடந்தான் வையம் கேழல் ஆகி* உலகை ஈர் அடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|
066. திவ்ய ப்ரபந்தம் - 1540 - வெண்ணெயுண்டான் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பூணாது அனலும்* தறுகண் வேழம் மறுக*
வளை மருப்பை பேணான் வாங்கி*
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
பாணா வண்டு முரலும் கூந்தல்* ஆய்ச்சி தயிர் வெண்ணெய்*
நாணாது உண்டான் நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|
067. திவ்ய ப்ரபந்தம் - 1541 - விபீடணனுக்கு நல்லவன் நாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சிப்*
பாடகத்துள் எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்*
இலங்கைக்கோன் வல் ஆள் ஆகம்* வில்லால் முனிந்த எந்தை*
விபீடணற்கு நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|
068. திவ்ய ப்ரபந்தம் - 1542 - கோவர்த்தனன் திருநாமம் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்*
மருவாத விடை தான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்*
தென் இலங்கை அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே|
069. திவ்ய ப்ரபந்தம் - 1543 - நமோ நாராயணம் என்றே சொல்லுங்கள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கான எண்கும் குரங்கும்* முசுவும் படையா*
அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற* வென்றி அம்மான்*
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும் உரைமின்* நமோ நாராயணமே|
070. திவ்ய ப்ரபந்தம் - 1544 - நமோ நாராயணம் என்ற நாமம் மிக நல்லது
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
நின்ற வரையும் கிடந்த கடலும்* திசையும் இரு நிலனும்*
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்* நமோ நாராயணமே|
071. திவ்ய ப்ரபந்தம் - 1545 - ஆநிறை காத்தவன் பெயர் நமோ நாராயணம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கடுங் கால் மாரி கல்லே பொழிய* அல்லே எமக்கு என்று படுங்கால்*
நீயே சரண் என்று* ஆயர் அஞ்ச அஞ்சா முன்*
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்* நமோ நாராயணமே|
072. திவ்ய ப்ரபந்தம் - 1546 - நமோ நாராயணம் என்றால் வினைகள் நீங்கும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை* நில மா மகள் மலர் மா மங்கை*
பிரமன் சிவன் இந்திரன்* வானவர் நாயகர் ஆய*
எங்கள் அடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள் வினைகள் தவிர உரைமின்* நமோ நாராயணமே|
073. திவ்ய ப்ரபந்தம் - 1547 - இவற்றைப் பாடினால் பாவம் பறந்து விடும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே|
074. திவ்ய ப்ரபந்தம் - 1548 - நம்பி! பிறவா வரம் அருள்வாய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால் போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே|
075. திவ்ய ப்ரபந்தம் - 1549 - நம்பி! நான் உன்னையே அழைக்கின்றேன்
ஏபெரிய திருமொழி - ழாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வற்றா முதுநீரொடு* மால் வரை ஏழும்*
துற்று ஆக முன் துற்றிய* தொல் புகழோனே*
அற்றேன் அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள் தந்திடு* என் எந்தை பிரானே|
076. திவ்ய ப்ரபந்தம் - 1550 - நம்பி! நான் உன்னையே உகந்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
கார் ஏய் கடலே மலையே* திருக்கோட்டி ஊரே*
உகந்தாயை* உகந்து அடியேனே|
077. திவ்ய ப்ரபந்தம் - 1551 - நம்பி! நான் உன்னை எப்படி மறப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
புள் வாய் பிளந்த* புனிதா என்று அழைக்க*
உள்ளே நின்று* என் உள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா!* கடல் மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால் உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே?
078. திவ்ய ப்ரபந்தம் - 1552 - நம்பி! உன்னைத் தொழும் விதத்தைச் சொல்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வில் ஏர்* நுதல் நெடுங் கண்ணியும் நீயும்*
கல் ஆர் கடுங் கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள் நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழும் ஆறே|
079. திவ்ய ப்ரபந்தம் - 1553 - நம்பி! உன்னைக் கண்டு நான் உய்ந்தேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய கனியே*
உன்னைக் கண்டு கொண்டு* உய்ந்தொழிந்தேனே|
080. திவ்ய ப்ரபந்தம் - 1554 - நம்பி! தொண்டர்கட்கு நீதான் கதி
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கதியேல் இல்லை* நின் அருள் அல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத் தொத்தே*
பதியே பரவித் தொழும்* தொண்டர் தமக்குக் கதியே*
உன்னைக் கண்டுகொண்டு* உய்ந்தொழிந்தேனே|
081. திவ்ய ப்ரபந்தம் - 1555 - நம்பி! நான் எப்படி விடுவேன்?
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அத்தா அரியே என்று* உன்னை அழைக்க*
பித்தா என்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே மணி மாணிக்கமே* முளைக்கின்ற வித்தே*
உன்னை எங்ஙனம் நான் விடுகேனே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment