||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.4
பஸ்²யந்த் யதோ³ ரூப மத³ப்⁴ர சக்ஷுஷா
ஸஹஸ்ர பாதோ³ரு பு⁴ஜாந நாத்³ பு⁴தம்|
ஸஹஸ்ர மூர்த⁴ ஸ்²ரவணாக்ஷி நாஸிகம்
ஸஹஸ்ர மௌல் யம்ப³ ரகுண்ட³ லோல் லஸத்||
- ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
- பாதோ³ரு பு⁴ஜாந நாத்³ பு⁴தம் - கால்கள், தொடைகள், புஜங்கள், முகங்கள் இவைகளால் மிக அற்புதமானதும்
- ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
- மூர்த⁴ ஸ்²ரவணாக்ஷி நாஸிகம் - தலைகள், காதுகள், கண்கள், மூக்குகள் உள்ளதும்
- ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
- மௌல் யம்ப³ ரகுண்ட³ லோல் லஸத் - கிரீடங்கள், தலைப்பாகைகள், குண்டலங்கள் இவைகளால் பிரகாசிக்கின்றதுமான
- யதோ³ ரூபம் - இந்த விராட் புருஷனின் ரூபத்தை
- அத³ப்⁴ர சக்ஷுஷா - மிக விரிவான ஞானக் கண்களால்
- பஸ்²யந்தி - யோகிகள் பார்க்கின்றனர்
அந்த விராட் திருவுருவம் - ஆயிரமாயிரம் திருவடிகள், தொடைகள், முகங்கள், ஆயிரமாயிரம் தலைகள், செவிகள், கண்கள், மூக்குகள் மற்றும் ஆயிரமாயிரம் கிரீடங்கள், ஆடைகள், குண்டலங்கள் ஆகியன கொண்டு விளங்கிற்று. இவ்வாறான அற்புதமான திருவுருவத்தை யோகிகள் தங்கள் ஞானக் கண்களால் காண்கின்றனர். அதாவது, எல்லாப் பொருள்களிலும் பரமாத்ம ஸ்வரூபத்தையே காண்கிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment