||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
யானை குவளைய பிதாவின் வதம்|
கிருஷ்ணனும் பலராமனும், காலையில் எழுந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு அமர்ந்திருந்தனர். அப்பொழுது தண்டோரா போடும் சத்தம் இவர்கள் செவியில் விழுந்தது, போட்டி ஆரம்பிக்க போகிறது என்று எண்ணி, அவ்விடத்துக்கு விரைந்தனர். நுழைவு வாசலில், குவளையபிதா என்ற ஓர் யானை நின்றுகொண்டு இருந்தது. யானை பாகன் அவர் இருவரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்தான், கிருஷ்ணன் பாகனை பார்த்து "ஏ யானை பாகா, எங்களது வழியை மறைக்காதே, நாங்கள் உள்ளே செல்லவேண்டும், எங்களை நீ மறைத்தால், உன்னையும் உனது யானையையும் கொல்லுவேன்" என்று எச்சரித்தார்.
இதற்கு பாகன் பதிலடி கொடுக்க நினைத்து, யானையின் கோபத்தை தூண்டினான், அது கிருஷ்ணனை தாக்க ஆரம்பித்தது. கிருஷ்ணனை யானை அதன் துதிக்கையால் தூக்க முயற்சித்தது, ஆனால் கிருஷ்ணர் அதன் பிடியில் இருந்து தப்பித்துவிட்டார். யானையின் நெற்றியில் பலத்த அடியை கொடுத்து, அதன் கால்களுக்கு நடுவில் சென்று ஒளிந்து கொண்டார். யானையின் கோபம் அதிகமானது, ஆனால் அதனால் கிருஷ்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை.
கிருஷ்ணர் வெளியே வந்ததும், துதிக்கை வைத்து மறுபடியும் அவரை தூக்கியது, கிருஷ்ணர் மீண்டும் அதன் பிடியில் இருந்து தப்பித்தார். இந்த முறை யானையின் பின் புறம் சென்று, அதன் வாலினை பிடித்துக்கொண்டார். வாலை பிடித்து இழுத்து, ஒரு இருபது மையில் தூரம் தூக்கியடித்தார். அவர் சிறு வயதில் கோகுலத்தில் கன்றுகளுடன் விளையாடியது போல தோன்றியது. யானை திரும்ப அவர் புறமாக ஓடி தாக்க வந்தது, அதன் வாலை எதிர்ப்புறமாக இழுத்து, சுழற்றினார் கிருஷ்ணர்.
பிறகு அதன் முகத்தில் கனமான அடியை கொடுத்து விட்டு, முன்னே ஓடினார், அவரை யானை துரத்த ஆரம்பித்தது, ஆனால் அதனால் அவரை தொடக்கூட முடியவில்லை. அவரை பிடிக்க முடியாததால், மதம் பிடித்தது போல இருந்தது. யானை இவ்வளவு அடிவாங்கியதை பார்த்தும், பாகன் திருந்தாமல் யானையை ஏவினான். இந்த விளையாட்டை முடிக்க நேரம் வந்துவிட்டதாக கிருஷ்ணன் எண்ணினான். யானையின் துதிக்கையை பிடித்து இழுத்து கவிழ்த்தார், அதன் தந்தங்களை பிடுங்கி, யானையையும் பாகனையும் கொன்றார். இந்த தந்தத்தை ஆயுதமாக கொண்டு, பலராமரும் கிருஷ்ணரும் மல்யுத்த அரங்கில் களம் இறங்கினர்.
தூரத்தில் இருந்து கொண்டு வீரர்கள் இதனை பார்த்துகொண்டு இருந்தனர், இதனை பார்த்த வீரர்கள் மனதில் பயம் வர ஆரம்பித்தது. கிருஷ்ணனின் வலிமையை பார்த்ததும் கம்சனே பயமுற்றான். ஆனால் சுற்றி இருந்த மக்கள் கிருஷ்ணரை பார்த்து உடல் சிலிர்த்தனர், இருவரின் அழகும், பெரிய கண்களும் மக்களை ஈர்த்தது. இருவரின் வீரத்தை பற்றி தெரிந்தவர்கள், மற்றவரிடம் இருவரை பற்றியும் புகழ ஆரம்பித்தனர், “கிருஷ்ணரும் பலராமரும் நாராயணின் ஒரு அங்கம் என்றும், கிருஷ்ணரின் உண்மையான தந்தை வசுதேவர்” என்றும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment