||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 16
ப்⁴ராஜிஷ்ணுர் போ⁴ஜநம் போ⁴க்தா
ஸஹிஷ்ணுர் ஜக³தா³தி³ஜ:|
அநகோ⁴ விஜயோ ஜேதா
விஸ்²வ யோநி: புநர்வஸு:||
- 143. ப்⁴ராஜிஷ்ணுர் - நான்கு திருக்கைகளுடன் கூடிய உருவத்துடன் பக்தர்களுக்குத் தன்னை ஒளிரச் செய்பவன்.
- 144. போ⁴ஜநம் - உணவு, அநுபவிப்பதற்குப் பொருளாய் இருப்பவன்.
- 145. போ⁴க்தா - உண்பவன், அநுபவிப்பவனாக இருப்பவன்.
- 146. ஸஹிஷ்ணுர் - மன்னிப்பவன். எல்லாப் பாவங்களையும் பொறுத்து அருள்பவன்.
- 147. ஜக³தா³தி³ஜஹ - உலக ஆரம்பத்தில் இருப்பவன்.
- 148. அநகோ⁴ - குற்றமற்றவன்.
- 149. விஜயோ - வெற்றியை உடையவன், வெற்றியை அருள்பவன்
- 150. ஜேதா - வெற்றி பெறுபவன்.
- 151. விஸ்²வ யோநிஃ - உலககாரணன்.
- 152. புநர்வஸுஹு - எல்லாத் தேவர்களிடத்தும் அந்தராத்மாவாக வசிப்பவன், வாழ்பவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment