||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.15
யத³ நுத்⁴ யாஸிநா யுக்தா:
கர்ம க்³ரந்தி² நிப³ந்த⁴ நம்|
சி²ந்த³ந்தி கோவிதா³ஸ் தஸ்ய
கோ ந குர்யாத் கதா² ரதிம்||
- யத்³ - எந்த இறைவனது
- அநுத்⁴யா - தியானமாகிய
- அஸிநா - கத்தியைக்
- யுக்தாஹ - கொண்டு
- கர்ம - பிரதிபலன் விளைவிக்கும் செயல்
- க்³ரந்தி² - முடிச்சை
- நிப³ந்த⁴ நம் - பின்னிப் பிணைந்துள்ள
- சி²ந்த³ந்தி - அவிழ்த்துக் கொள்கின்றனர்
- கோவிதா³ஸ் - விவேகிகள்
- தஸ்ய - அப்படிப்பட்ட இறைவனது
- கோ - யார் தான்
- ந - மாட்டார்
- குர்யாத் - செய்ய
- கதா² - கதையில் ஆசையை உண்டு
- ரதிம் - பண்ணுகிற கவனம்
இவ்வாறு நிரந்தரமான 'பகவத் தியானம்' என்கிற வாள் கொண்டு, அறிஞர்கள் மனத்தில் உள்ள கர்ம முடிச்சை அறுத்து எறிகிறார்கள். அவ்வாறிருக்க, அந்த முகுந்தனுடைய கதையைக் கேட்பதில் யாருக்கு தான் ஆசை பிறக்காது?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment