||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.16
ஸு²ஸ்²ரூஷோ: ஸ்²ரத்³த³தா⁴ நஸ்ய
வாஸுதே³வ கதா²ருசி:|
ஸ்யாந் மஹத் ஸேவயா விப்ரா:
புண்ய தீர்த² நிஷேவணாத்||
- விப்ராஹா - ஹே ப்ராமணோத்தமர்களே!
- புண்ய தீர்த² - புண்ணிய தீர்த்தங்களை
- நிஷேவணாத் - சேவிப்பதாலும்
- மஹத் ஸேவயா - பெரியாருடைய பாத ஸேவையாலும்
- ஸ்²ரத்³த³ தா⁴நஸ்ய - ஸ்ரத்தையோடு கூடியவனும்
- ஸு²ஸ்²ரூஷோஸ் - இறைவன் குணத்தை கேட்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவனுமான மனிதனுக்கு
- வாஸுதே³வ - வாஸுதேவனின்
- கதா²ருசிஹி - கதையில் விருப்பம்
- ஸ்யாந் - உண்டாகும்
அந்தணப் பெரியோர்களே! புண்ணிய நதிகளில் நீராடுவதால் சான்றோர்களின் தரிசனம் (சாது சத்சங்கம்) கிடைக்கும். சாதுக்களின் நட்பினால் அறநெறிகளில் ஈடுபாடு உண்டாகும். அதன்பின், பகவானுடைய குணங்களைக் கேட்பதில் விருப்பம் ஏற்படும். பின்னர், பகவானுடைய கதைகளைக் கேட்பதில் நம்பிக்கை பிறக்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment