About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 16 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 139

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 1

ஶ்ரீ பீஷ்ம உவாச|
இதீத³ம் கீர்த்தி நீயஸ்ய 
கேஸ²வஸ்ய மஹாத்மந꞉|
நாம் நாம் ஸஹஸ்ரம் தி³வ்யாநாம் 
அஸே²ஷேண ப்ரகீர்திதம்|| 


மஹாத்மந꞉ - மஹாத்மநஹ

மகிமை பொருந்தியவரும் போற்றத் தக்கவருமான கேசவருடைய திவ்ய நாமங்கள் ஆயிரமும் ஒன்று விடாமல் சந்தந மகாராஜாவின் குமாரரான பீஷ்மரால் குந்தி மகனான தரும புத்திரனுக்கு கூறப்பட்டன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.3 

ஸ்ரீ ப⁴க³வாநுவாச||| 
லோகே அஸ்மிந் த்³விவிதா⁴ நிஷ்டா² 
புரா ப்ரோக்தா மயா நக⁴|
ஜ்ஞாந யோகே³ந ஸாங்க்²யா நாம் 
கர்ம யோகே³ந யோகி³ நாம்||

  • ஸ்ரீப⁴க³வாநுவாச - ஸ்ரீபகவான் சொல்லுகிறார்
  • லோகே - உலகில்  
  • அஸ்மிந் - இந்த 
  • த்³விவிதா⁴ - இரு விதமான 
  • நிஷ்டா² - நம்பிக்கை  
  • புரா - முன்னரே 
  • ப்ரோக்தா - கூறப்பட்டது 
  • மய - என்னால் 
  • அநக⁴ - பாவமற்றவனே 
  • ஜ்ஞாந யோகே³ந - ஞானம் என்னும் இணைப்பு முறையால் 
  • ஸாங்க்²யா நாம் - ஸாங்கிய தத்துவவாதிகளின் 
  • கர்ம யோகே³ந - பக்தி என்னும் இணைப்பு முறையில் 
  • யோகி³ நாம் - பக்தர்களது

ஸ்ரீ பகவான் கூறுகிறார்: பாவமற்றவனே! அர்ஜுநா, இந்த உலகில் இருவிதமான நம்பிக்கை இருக்கிறது என என்னால் முன்னரே கூறப்பட்டது. ஸாங்கிய தத்துவவாதிகளின் ஞானம் என்னும் இணைப்பு முறையாலும், பக்தர்கள் பக்தி என்னும் முறையாலும் தன்னுணர்வினை அடைய முயல்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.29

பா⁴ரத வ்யப தே³ஸே²ந
ஹ்யாம் நாயார் த²ஸ்²ச த³ர்ஸி²த:|
த்³ருஸ்² யதே யத்ர த⁴ர்மாதி³ 
ஸ்த்ரீ ஸூ²த்³ராதி³ பி⁴ரப் யுத|| 

  • பா⁴ரத வ்யப தே³ஸே²ந - பாரத கதை என்ற வ்யாஜமாக 
  • ஆம் நாயார் த²ஸ்² ச -  வேதப் பொருள்களும் 
  • த³ர்ஸி²தஹ ஹி -  காண்பிக்கப் பட்டதன்றோ 
  • உத யத்ர - மேலும் இந்த பாரதத்தில் 
  • ஸ்த்ரீ - பெண்கள் 
  • ஸூ²த்³ராதி³பி⁴ - ஸூத்ரர்களாலும் 
  • அபி⁴  - கூட 
  • த⁴ர்மாதி³  - தர்மம் முதலியவை 
  • த்³ருஸ்² யதே -  தெரிந்து கொள்ளப் படுகின்றது

மாதர்கள், நான்காம் வருணத்தவர் ஆகியவர்களும் பின்பற்றக் கூடிய அறநெறிகளையும், வேதவிழுப் பொருளையும் அனைவரும் அறியும் வண்ணம் 'பாரதம்' என்ற பெயரில் வெளியிட்டேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.74

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.74

நிவேத³ யித்வாபி⁴ ஜ்ஞாநம் 
ப்ரவ்ருத்திம் ச நிவேத்³ய ச|
ஸமாஸ்² வாஸ்ய ச வைதே³ஹீம் 
மர்த³ யாமாஸ தோரணம்|| 

  • அபி⁴ ஜ்ஞாநம் - ராமனின் மோதிரம் எனும் அடையாளத்தை 
  • நிவேத³ யித்வா ச - தெரியப்படுத்தியும்
  • ப்ரவ்ருத்திம் - முயற்சியை 
  • நிவேத்³ய ச - தெரிவித்தும் 
  • வைதே³ஹீம் - விதேஹ தேசத்து அரசர் பெண்ணை 
  • ஸமாஸ்² வாஸ்ய ச - தைரியப்படுத்தியும் 
  • தோரணம் - வெளி வாயிலை
  • மர்த³ யாமாஸ - சிதைத்தார்

ராமனின் மோதிரம் எனும் அடையாளத்தைக் கொடுத்து, ராமனின் ஏற்பாடுகளையும் சொல்லி,  சீதைக்கு ஆறுதலளித்து அசோக வனத்தில் இருந்த கோட்டைவாயில் கோபுரத்தை (தோரணத்தை) அழித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 116 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 116 - கற்பக மரத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவன் என்று* இந்திரன் காவினில்* 
நிற்பன செய்து* நிலாத் திகழ் முற்றத்துள்* 
உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான்* 
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்|

  • இந்திரன் காவினில் - இந்த்ரனுடைய உத்யாந வநத்திலிருந்த
  • கற்பகம் காவு - கற்பகச் சோலையை
  • கருதிய - தன் வீட்டிற் கொண்டு வைக்க வேணுமென்று விரும்பிய
  • காதலிக்கு - தனக்கு ப்ரியையான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு
  • இப்பொழுது - இப்பொழுதே
  • ஈவன் - கொண்டு வந்து தருவேன்
  • என்று - என்று சொல்லி
  • நிலா திகழ் - நிலவொளி சூழ்ந்த
  • முற்றத்துள் - அவள் வீட்டு முற்றத்தில்
  • நிற்பன செய்து - கற்பக விருக்ஷத்தை நிற்க வைத்து  
  • உய்த்தவன் - தழைக்கும்படி செய்த கண்ணன்
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • உம்பர் கோன் - அன்று தன் பராக்ரமத்தை காட்டிய தேவர்கள் தலைவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

தன்னுடைய காதலி சத்யபாமாவின் விருப்பத்திற்கு இணங்க இந்திரனுடைய நந்தவனத்திலிருந்த கற்பகச் சோலையை, "இதோ இப்பொழுதே கொண்டு வந்து தருகிறேன் " என்று கூறி அவள் வீட்டு நிலா காயும் முற்றத்தில் இருத்தி மலரச் செய்தவன், கண்ணன், என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

035. திருதேவனார் தொகை (திருநாங்கூர்)
முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1248 - 1257 - நான்காம் பத்து - முதலாம் திருமொழி 

--------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

ஆர்க்கும் வலம் புரியால் அண்டமும் எண் திசையும்*
கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் சீர்க்கும்*
திருத் தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்*
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து*

  • சீர்க்கும் – சிறப்புப் பெற்ற
  • திருத்தேவனார்தொகை மால் – திருத்தேவனார் தொகை என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற திருமால்
  • பாரிஜாத விருக்ஷத்தைத் தேவ லோகத்தில் இருந்து பேர்த்துக் கொணரும் போது
  • செம் வாய் வைத்து ஊத – பாஞ்ச ஜந்யத்தைத் தமது சிவந்த வாயிலே வைத்து ஊதுகையில்
  • ஆர்க்கும் வலம்புரியால் – பேர் ஆரவாரம் செய்கின்ற அந்த வலம்புரிச் சங்கத்தினால்
  • தரு தேவனார் தொகையும் – கற்பக தருவின் நிழலில் வசிக்கின்ற தேவர்களின் கூட்டமும்
  • சாய்ந்து – மூர்ச்சித்து விழ 
  • அண்டமும் – அண்டங்களும்
  • எண் திசையும் – எட்டுத் திக்குக்களும்
  • கார் கடலும் – கரிய சமுத்திரமும்
  • வெற்பும் – அஷ்ட குல பருவதங்களும்
  • கலங்கின – கலங்கிப் போயின

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 83

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 28

ஸ்கந்தம் 03

கபில பகவான் தன் பவள வாய் திறந்து தன்னைச் சுமந்த தாயின் பந்தங்களை அறச்செய்யுமாறு பேசினார்.

அம்மா! நான் அனைத்து ஜீவனுள்ளும் அந்தராத்மாவாக இருப்பவன். ப்ரக்ருதி, புருஷன் இவர்களை வழி நடத்துபவன். என்னை வணங்குவதால் மரணபயம்‌ நீங்கும். என்னிடம்‌ உள்ள பயத்தினாலேயே பஞ்ச பூதங்களும் தன் பணிகளைச் செவ்வனே செய்கின்றன. ஆகவே, யோகிகளும், பக்தர்களும் பயமே இல்லாத என் சரணத்தையே பற்றுகிறார்கள்.


ப்ரக்ருதி முதலிய தத்வங்களின் இலக்கணத்தைத் தொடர்ந்து கூறினார் கபிலர். அன்பு அம்மா! ஆன்மாவைப் பற்றிய உண்மை அறிவே மோக்ஷத்திற்கு வழி காட்டும். அதுதான் மனிதர்களின் யான், எனது என்ற அஹங்காரத்தைக் களைய உதவும். இந்த அகில உலகங்களும் எந்த பரமானால் எங்கும் நிரம்பி வழிகிறதோ, அந்த ஆன்மதத்வமே புருஷன். அவன் அனாதி. தோற்றமும் முடிவும் இல்லாதவன். ப்ரக்ருதி வயப்படாதவன். ஹ்ருதய குகையில் காட்சி தருபவன். தனக்குத்தானே ஒளிர்பவன்.

ப்ரக்ருதி ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்னும்‌ முக்குணங்கள் உடையது. அதற்கு சுயமாக சக்தி கிடையாது. பகவானுடன் இருப்பதாலேயே சக்தி பெற்று தன் மாயையால் செயல்களைப் புரிகிறது. ப்ரக்ருதி என்பது ஆவரண சக்தியான மறைக்கும் திறன், விக்ஷேப சக்தியான கலக்கும் திறன் என்று இரு வகைப்படும். ஆவரண சக்தியோடு ஜீவனுடன் கூடினால் அது அவித்யை அல்லது அறியாமை எனப்படும். விக்ஷேப சக்தியுடன்‌ பகவானைக் கலந்தால், அது மாயை எனப்படுகிறது.

புருஷன் ஜீவன், ஈஸ்வரன் என்று இரு வகையாகத் தோற்றம் அளிக்கிறான். ப்ரக்ருதியின் உண்மையறிவு இன்மையால், உலகியல்‌ இன்ப துன்பங்களை அடைகிறான் ஜீவன். அதே ப்ரக்ருதியைத் தன் வயப்படுத்தி படைப்பு முதலியவைகளைச் செய்கிறான். ப்ரக்ருதியின் உண்மை அறிவைப் பெறும் ஜீவன் ஈஸ்வரனின் ஸ்தானத்தை அடைந்து அவனுடன் கலந்து விடுகிறான். அவ்வாறு உண்மை அறிவைப் பெற்ற ஜீவனையும் ஈஸ்வரனையும் வேறுபடுத்த இயலாது. ப்ரக்ருதியின் உண்மை அறிவற்ற ஜீவன் உலகை ஐந்து வழிகளால் அடைகிறது. ப்ரக்ருதியின் ஸத்வகுணத்தைக் கொண்டு ஆதி புருஷன் போன்ற ஜீவன் படைக்கப்படுகிறான். அந்த ஜீவன் ப்ரக்ருதியின் சக்தியில் மயங்கித் தன் உண்மை ஸ்வரூபத்தை மறந்து விடுகிறான். இதனாலேயே ஆண் பெண்களுக்குள் ஈர்ப்புத் தன்மை தோன்றியது. அதை ஜீவன் தன் குணமாக ஏற்றுக்கொண்டான். அந்த ஜீவன் முக்குணத்தினால் ஏற்படும் செய்கைகளைத் தான் செய்வதாகவே எண்ணுகிறான். நானே செயல்களைச் செய்கிறேன் என்ற எண்ணத்தால் தான், செயலற்ற, ஸ்வந்தந்திரமான, ஆனந்தமயமான ஜீவனுக்கு பிறப்பு இறப்பு, ப்ரக்ருதிக்கு அடிமையாவது போன்ற தன்மைகள் ஏற்படுகின்றன. 

தேவஹூதி கேட்டாள்.  புருஷோத்தமா! ப்ரக்ருதி அதாவது கண்ணால் காணப்படும் உலகம், புருஷன் இவை இரண்டின் இலக்கணம் என்ன? இவைதானே ப்ரபஞ்சத்திற்குக் காரணம்? இவை இரண்டும் எங்கிருந்து உற்பத்தியாகின்றன?

பகவான் சொல்லத் துவங்கினார். ப்ரக்ருதி முக்குணங்களை உடையது. அழிவில்லாதது. காரண காரிய வடிவானது. எல்லா விதச் செயல்பாடுகளுக்கும் நிலைக்களனாக விளங்குவது. ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், மனம், அஹங்காரம், மஹத், அவ்யக்தம்‌ என்ற நான்கு அந்தக்கரணங்கள், பத்து பொறிகள், ஆகிய இருபத்து நான்கு தத்துவங்கள் அடங்கிய திறன் ப்ரக்ருதியின் காரியம்‌ என்று கூறப்படுகிறது.

மேற்கொண்டு இந்த தத்வங்களை விளக்கிக் கூறினார் கபிலர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Friday, 12 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 138

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 108

வநமாலீ க³தீ³ ஸா²ர்ங்கீ³ 
ஸ²ங்கீ² சக்ரீ ச நந்த³கீ:|
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர் 
வாஸுதே³வோ பி⁴ரக்ஷது|| (2)

ஸ்ரீ வாஸுதே³வோ பி⁴ரக்ஷது ஓம் நம இதி||

  • வநமாலீ - வைஜெயந்தி மலர்களின் மாலையை அலங்கரிப்பவர்
  • க³தீ³ - சூலாயுதத்தை ஏந்துபவர்
  • ஸா²ர்ங்கீ³ - ஷார்ங்கம் என்று அழைக்கப்படும் வில் ஏந்தியவர்
  • ஸ²ங்கீ² - பாஞ்சஜன்யம் என்ற சங்கு தாங்குபவர்
  • சக்ரி ச - சுதர்சனம் என்று அழைக்கப்படும் சக்கரத்தை ஆயுதமாக தாங்குபவர்
  • நந்த³கீ - நந்தகா என்ற வாளை ஏந்தியவர்
  • ஸ்ரீமாந் - லட்சுமி தேவியை உடையவர்
  • நாரயணோ - நர என்றால் ஆத்மா, அயனம் என்றால் பயணம் அல்லது தங்குமிடம். நாராயணன் எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒருவர்.
  • விஷ்ணுர் - அகிலம் முழுவதையும் வியாபித்திருப்பவர் 
  • வாஸுதே³வ - பிரபஞ்சம் முழுவதையும் மாயாவால் மறைக்கும் தெய்வீகம்
  • அபி⁴ரக்ஷது - பக்தர்களைக் காப்பவர்

வைஜயந்தி எனப்படும் வாடாத வநமாலையை அணிந்தவரும், சங்கு சக்கரம் சாரங்கம் கதை நந்தகம் ஆகியவற்றைத் திவ்ய ஆயுதங்களாக உடையவரும், விஷ்ணு என்றும், வாசுதேவர் என்றும் பெயர் கொண்டவரும், பிராட்டியாரோடு கூடியவருமான நாராயணன் நம்மைக் காப்பாராக|

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆயிரம் திருநாமங்கள் முற்றும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.2 

வ்யாமிஸ்² ரேணேவ வாக்யேந 
பு³த்³தி⁴ம் மோஹய ஸீவ மே|
ததே³கம் வத³ நிஸ்² சித்ய 
யேந ஸ்²ரேயோ அஹ மாப்நுயாம்||

  • வ்யாமிஸ்²ரேண - இரு பொருள்படும்  
  • இவ - போன்ற 
  • வாக்யேந - வாக்கியங்கள் 
  • பு³த்³தி⁴ம் - புத்தி  
  • மோஹயஸி - தாங்கள் மயக்குகின்றீர்  
  • இவ - நிச்சயமாக 
  • மே - என்னுடைய  
  • தத் - எனவே 
  • ஏகம் - ஒன்றை 
  • வத³ - தயவு செய்து கூறுவீர் 
  • நிஸ்²சித்ய - நிச்சயமாக 
  • யேந - எதனால்  
  • ஸ்²ரேயோ - உண்மைப் பலன் 
  • அஹம் - நான் 
  • ஆப்நுயாம் - அடையலாம்

இரு பொருள்படும் வாக்கியங்களால் என்னுடைய புத்தியை தாங்கள் மயக்குகின்றீர். எனவே, நான் எதனால் நன்மை அடையலாம் என்ற ஒன்றை, தயவுசெய்து கூறுவீர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.28

த்⁴ருத வ்ரதே ந ஹி மயா 
ச²ந்தா³ம் ஸி கு³ரவோ க்³நய:|
மாநிதா நிர்வ்யலீ கேந 
க்³ருஹீதம் சாநு ஸா²ஸநம்|| 

  • த்⁴ருத வ்ரதே ந - விரதங்களை தரித்தவனும்
  • நிர்வ்யலீ கேந -  கபடம் அற்றவனுமான
  • மயா -  என்னால்
  • ச²ந்தா³ம் ஸி -  வேதங்களும்
  • கு³ரவ - பெரியோர்களும் 
  • அக்³நயஹ - அக்னிகளும்  
  • மாநிதா - பூஜிக்கப்பட்டன
  • அநு ஸா²ஸநம் ச - அவர்களின் கட்டளையும்
  • க்³ருஹீதம் ஹி - ஸ்வீகரிக்கப் பட்டது அன்றோ

பிரம்மசரிய விரதத்தைக் கைக்கொண்டு வேதங்களைக் கற்றேன். குருமார்களையும் அக்னியையும் வணங்கினேன். அவர்களது ஆணையைக் கபடமின்றித் தலைமேற் கொண்டேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.73

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.73

தத்ர லங்காம் ஸமா ஸாத்³ய 
புரீம் ராவண பாலிதாம்|
த³த³ர்ஸ² ஸீதாம் த்⁴யா யந்தீம்
அஸோ²க வநி காம் க³தாம்|| 

  • ராவண பாலிதாம் - ராவணனால் அரசாளப்பட்ட 
  • லங்காம் - இலங்கை என்கிற
  • புரீம் - பட்டணத்தை
  • ஸமா ஸாத்³ய -  அடைந்து
  • தத்ர - அங்கு 
  • அஸோ²க வநி காம் - அசோக வனத்தை 
  • க³தாம் - அடைந்து
  • த்⁴யா யந்தீம் - தியானித்துக் கொண்டு இருக்கிற
  • ஸீதாம் - ஸீதையை
  • த³த³ர்ஸ² - கண்டார்

அவர் ராவணனால் ஆளப்படும் லங்கா புரியை அடைந்து, அசோக வனத்தில் தியானித்துக் கொண்டிருக்கும் சீதையைக் கண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 115 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 115 - மறையோர் வணங்கும் எம்பிரான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

மூத்தவை காண* முது மணற் குன்று ஏறிக்* 
கூத்து உவந்து ஆடிக்* குழலால் இசை பாடி* 
வாய்த்த மறையோர் வணங்க* 
இமையவர் ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்* 
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்|

  • மூத்தவை - ஆச்சார்யம், வயசு, ஞானம், இவற்றால் முதிர்ந்த  இடைச் சனங்கள்
  • காண - பார்ப்பதற்காக
  • முது மணல் - நெடு நாளாய் குவிந்து மேடாயிருந்த 
  • குன்று ஏறி - மணல் குன்றின் மேலேறி இருந்து
  • உவந்து - ஸந்தோஷித்து
  • கூத்து ஆடி - கூத்தாடியும் நின்று
  • குழலால் - புல்லாங்குழலினால் 
  • இசைபாடி - ராகம் பாடிக் கொண்டும்
  • வாய்த்த - தன்னுடைய சேஷ்டிதத்தைக் காணும் படி கிட்டின
  • மறையோர் - ப்ரஹ்ம ரிஷிகள், வேத விற்பன்னர்கள்
  • வணங்க - தன்னைக் கண்டு வணங்கவும்
  • இமையவர் - தேவர்கள்
  • ஏத்த - ஸ்தோத்ரம் செய்யவும்
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • எம்பிரான் - எம்பெருமான் 
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

வயதில் முதிர்ந்த இடையர்கள் காணும்படியாகவும், ஒரு பழமையான மணற் குன்றின் மேலேறி ஆடிப் பாடியும், வேணு கானம் இசைத்தும், பிரம்மரிஷிகள் தன்னை வணங்க, தேவர்கள் துதிக்க, மிக்க ஆனந்தமாய் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! எம்பெருமான், என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

035. திருதேவனார் தொகை (திருநாங்கூர்)
முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ தெய்வநாயகன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ கடல்மகள் தாயார் ஸமேத ஸ்ரீ தெய்வநாயகன் பெருமாள்
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: தெய்வநாயகன்
  • பெருமாள் உற்சவர்: மாதவன்
  • தாயார் மூலவர்: கடல்மகள் நாச்சியார்
  • திருமுக மண்டலம் திசை: மேற்கு
  • திருக்கோலம்: நின்ற
  • புஷ்கரிணி: தேவஸபா
  • தீர்த்தம்: சோபன  
  • விமானம்: சோபன
  • ப்ரத்யக்ஷம்: வசிஷ்டர்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார் 
  • பாசுரங்கள்: 10

-----------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திருமகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த் தொகை என பெயர் ஏற்பட்டது. கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால், விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது சிறப்பு.

துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். 

துர்வாசரும், "இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப் பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்', என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 82

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 27

ஸ்கந்தம் 03

மூலகாரணனான இறையைத் தன் மகவாகப் பெறும் பேறு பெற்ற தேவஹூதி வினவினாள்.

பக்தி யோகத்தினால் உங்களை அடையலாம் என்று சொன்னீர்கள். பக்தி யோகம் எத்தகையது? அதன் உண்மை ஸ்வரூபம் என்ன? உலகியல் தளைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பெண்ணாகிய நான் எத்தகைய பக்தியைச் செய்தால், ஆனந்தமே உருவான உங்களைச் சுலமா அக அடையலாம்?


இலக்கைக் குறியாக அடிக்கும் அம்பைப் போல், பகவானைக் குறியாக அடித்துத் தரும் அந்த பக்தியோகத்தைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்.

நீங்கள் கூறிய பக்தி யோகம் சுலபம் போல் தோன்றினாலும்‌ அறிஞர்க்கும் அரிது. நீங்களோ அண்டியவரைக் காக்கும் ஹரி. நானோ மந்த புத்தியுள்ள பெண்பிள்ளை. எப்படிக் கூறினால் எனக்கு எளிதாக விளங்குமோ அப்படிக் கூறியருள வேண்டும்.

கபிலர் இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்து பக்தி யோகத்தை விளக்கும் ஸாங்க்யம் என்ற யோகத்தை எடுத்துரைத்தார்.

அம்மா! உலக விஷயங்களை என்னென்னவென்று அறிவிக்கும் ஞானேந்திரியங்கள், கர்மங்களைச்‌ செய்யும்‌ கர்மேந்திரியங்கள், இவற்றை ஊக்குவிக்கும் மனம் ஆகிய இம்மூன்றுமே காரணமின்றி எந்தப்‌ பயனையும் விரும்பாது.

இவற்றைத் தூய்மையான இறைவனிடத்தில் நிலைபெறச் செய்வதே பக்தியாம். இது முக்தியைக் காட்டிலும் சிறந்தது.

வயிற்றிலுள்ள அக்னி, உண்ணப்பட்ட உணவை ஜீரணம்‌செய்து அழிப்பது போல், அனாதி கர்ம வாசனைகளின் கொள்கலனான இவ்வுடலை பக்தி விரைவில் பொசுக்குகிறது. கர்மா அழியுமானால் உடல் தேவையில்லை. கர்மாவை அனுபவிக்கவே உடல்.

எனது திருவடி சேவையில் ஈடுபாடு கொண்டு அனைத்துச் செயல்களையும்‌ எனக்காகவே செய்யும்‌ பக்தர்கள், எனது கல்யாண குணங்களை விவரிக்கும்‌ லீலைகளை ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் ஆசையுடனும் பேசிக் கொள்வார்கள். இத்தகைய பக்தர்கள் முக்தியையும் விரும்ப மாட்டார்கள்.

சிரித்த முகமும், தாமரைக்‌ கண்களும் கொண்ட என் அழகிய திருமேனியைக் கண் குளிரக் கண்டு மகிழ்கிறார்கள். செவிக்கும் மனத்திற்கும் இனிதான என் அழகைப் புகழ்ந்து பாடி பாடி பொழுதைப் போக்குகிறார்கள். பெரிய தவச்சீலர்களாயினும், அவர்கள் விரும்புவது இஃதே.

என் திருமேனியின் ஒவ்வொரு அங்கமும்‌ அழகின் எல்லை. என் மேல் கொண்ட பக்தி, அவர்கள் விரும்பாவிடினும் அவர்களுக்கு முக்தியளிக்கிறது.

என் பக்தர்கள் அவித்யை அறவே நீங்கிய பின்னர், என் மாயையினால் படைக்கப்பட்ட ப்ரும்மலோகம் முதலான அனைத்து போகங்கள், அஷ்டமா சித்திகள், வைகுண்ட லோகத்தையும் கூட விரும்புவதில்லை.

ஆனால், அவர்களுக்கு இவையெல்லாம் தானாகவே கிடைக்கின்றன. அவர்களுக்கு அன்புக்கிடமான ஆத்மா, காதலுக்கிடமான காதலி, மனைவி, மக்கள், நம்பிக்கைக்கிடமான தோழன், நன்மையே நவிலும்‌ ஆசிரியன், நன்மையே செய்யும்‌ தோழன், பூஜை செய்யத் தகுந்த குலதெய்வம் அனைத்தும் நானே.

என்னுடைய காலச் சக்கரம்‌ இவர்களைத் தீண்டாது. இவர்களை நான் ஸம்சார ஸாகரத்தினின்றும் கரையேற்றுகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Thursday, 11 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 137

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 107

ஸ²ங்க² ப்⁴ருந் நந்த³கீ சக்ரீ 
ஸா²ர்ங்க³ த⁴ந்வா க³தா³ த⁴ர:|
ரதா²ங்க³ பாணி ரக்ஷப்⁴யஸ் 
ஸர்வ ப்ரஹரணா யுத⁴:||

ஸர்வ ப்ரஹரணா யுத⁴ ஓம் நம இதி|| 

  • 993. ஸ²ங்க² ப்⁴ருந் - வனமாலையைத் தரிப்பவர். பாஞ்சஜன்யம் என்ற சங்கைத் தன் கையில் சுமப்பவர்.
  • 994. நந்த³கீ - நந்தகம் என்னும் வாளைத் திவ்ய ஆயுதமாக உடையவர். ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவர்.
  • 995. சக்ரீ - திருவாழியை (சக்ராயுதத்தை) உடையவர். இடையறாமல் யுகச் சக்கரத்தைச் சுழலச் செய்பவர்.
  • 996. ஸா²ர்ங்க³ த⁴ந்வா - ஸ்ரீசார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவர்.
  • 997. க³தா³ த⁴ரஹ - கௌமேதகீ என்றழைக்கப்படும் கதாயுதத்தை உடையவர். மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவர்.
  • 998. ரதா²ங்க³ பாணிர் - தேர்ச் சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவர்.
  • 999. அக்ஷப்⁴யஸ் - அசைக்க முடியாதவர்.
  • 1000. ஸர்வ ப்ரஹரணா யுத⁴ஹ - எல்லாத் திவ்ய ஆயுதங்களையும் உடையவர். அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவர்.

ஓம் நம இதி ஸர்வ ப்ரஹரணா யுத என்பதுடன் 
1000 திருநாமங்கள் நிறைவுறும். 

ஸர்வ ப்ரஹரணா யுத என்னும் திருநாமத்தை 
இருமுறை ஓதி ஓம் நம என்று முடிப்பது முறை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.1 

அர்ஜுந உவாச|
ஜ்யாயஸீ சேத் கர்மணஸ் தே 
மதா பு³த்³தி⁴ர் ஜநார்த³ந|
தத் கிம் கர்மணி கோ⁴ரே மாம் 
நியோ ஜயஸி கேஸ²வ||

  • அர்ஜுந உவாச - அர்ஜுநன் கூறினான் 
  • ஜ்யாயஸீ - சிறந்தது  
  • சேத் - இருந்தால் 
  • கர்மணஸ் - பலன் நோக்குச் செயல்களை விட 
  • தே - தங்களால் 
  • மதா - அபிப்பிராயம்  
  • பு³த்³தி⁴ ர் - புத்தி 
  • ஜநார்த³ந - கிருஷ்ண 
  • தத் - எனவே 
  • கிம் - ஏன்  
  • கர்மணி - செயலில் 
  • கோ⁴ரே - கொடிய 
  • மாம் - என்னை  
  • நியோ ஜயஸி - ஈடுபடுத்துகிறாய்  
  • கேஸ²வ - கேசவனே

அர்ஜுநன் கூறுகிறார்:- ஜனார்த்தனா! கேசவா! செய்கையை விட ஞானமே சிறந்தது எனில் கோரமான இப்போரில் என்னை ஏன் ஈடுப்படுத்துகிறாய்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்