||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணர் வைகுண்டம் திரும்புகிறார்|
அச்சமயம் பிரம்மா அங்கு தோன்றி, அவருடன் சிவனும், இந்திரன் முதலான தேவர்களும் தோன்றினார்கள். அவர்கள் பகவானின் பூவுலக அவதார முடிவை காண ஆவலுடன் அங்கு கூடினார்கள். அனைவரும் கிருஷ்ணர் மீது பூமழை தூவி, அவரைப் போற்றி பாடல்கள் பல பாடினர்.
கிருஷ்ணர் கண்களை மூடி, யோகத்தில் அமர்ந்து தம் ஆன்மாவில் ஒன்றினார். உலகையே மயக்கிய தம்முடைய கிருஷ்ண ரூபத்துடன் பகவான் வைகுண்டத்திற்கு திரும்பினார். இன்றும் பக்தர்கள் தியானத்தில் ஆழ்ந்து அவருடைய என்றும் அழியாத ரூபத்தைக் காணும் பேருபெறுகிறார்கள்.
இத்துடன் கிருஷ்ணர் லீலைகளின் கதைகள் முற்றும். இத்தனை பகுதிகளையும் தொடர்ந்து படித்த அனைவருக்கும் கிருஷ்ணர் அருள் கிட்டட்டும் என்று முழு மனதுடன் வேண்டிக் கொள்கிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment