||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
028. திருக்காழி சீராம விண்ணகரம் (சீர்காழி)
இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1178 - 1187 - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
செல்லும் தொறும் உயிர்ப்பின் செல்லும் இரு வினையை*
வெல்லும் உபாயம் விரும்புவீர் தொல் அரங்கர்*
சீராம விண்ணகரம் சேர்மின் பின் மீளாத*
ஊர் ஆம் அவ் விண்ணகரம் உண்டு*
- செல்லும் தொறும் – உடலை விட்டு உயிர் போகின்ற இடங்களில் எல்லாம்
- உயிர் பின் செல்லும் – அவ்வுயிரின் பின்னே விடாது தொடர்ந்து செல்லுகின்ற
- இரு வினையை – நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளையும்
- வெல்லும் – கடத்தற்குத் தக்க
- உபாயம் – வழியை
- விரும்புவீர் – இச்சிக்கின்றவர்களே! நீங்கள்
- தொல் அரங்கர் சீராமவிண்ணகரம் சேர்மின் – பழைய திருவரங்கநாதனுடைய திருச்சீராம விண்ணகரம் என்னும் ஸ்தலத்தைப் போய்ச் சேருங்கள்
- பின் – அவ்வாறு சேர்ந்த பிறகு
- மீளாத ஊர் ஆம் அ விண்நகரம் – தன்னைச் சேர்ந்தவர் திரும்பிச் செல்லுதல் இல்லாத திருநகரமாகிய அந்தப் பரமபதம்
- உண்டு – உங்களுக்குச் சித்திக்கும்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment