||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 62
த்ரிஸாமா ஸாமக³: ஸாம
நிர்வாணம் பே⁴ஷஜம் பி⁴ஷக்:|
ஸந்யாஸ க்ருச்ச²மஸ்² ஸா²ந்தோ
நிஷ்டா² ஸா²ந்தி: பராயணம்||
- 581. த்ரிஸாமா - சாமங்களினால் பாடப்படுபவர். மும்மடங்கு சாம வேதத்தால் முன்னிறுத்தப்பட்டவர்
- 582. ஸாமக³ஸ் - ஸாமத்தை (ஸாம கானத்தைப்) பாடுபவர்.
- 583. ஸாம - தன்னைப் பாடுபவர்களின் பாவங்களை ஒழிப்பவர்.
- 584. நிர்வாணம் - முக்தி வடிவானவர். முழுமையான பேரின்பம்.
- 585. பே⁴ஷஜம் - பிறவிப் பிணிக்கு மருந்தானவர்.
- 586. பி⁴ஷக்கு - மருத்துவர்.
- 587. ஸந்யாஸ க்ருச் - தியாகம் செய்பவர். ஆசைகள் துறக்கப்படும் போது அவர் பிணைப்புகளை துண்டிக்கிறார்.
- 588. ச²மஸ்² - உபதேசிப்பவர்.
- 589. ஸா²ந்தோ - அமைதியானவர்.
- 590. நிஷ்டா² - தியானத்துக்குப் பொருளாயிருப்பவர்.
- 591. ஸா²ந்திஃ - சாந்தியுடையவர்.
- 592. பராயணம் - பரமபக்தியைத் தானே அளிப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment