About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 82

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 52

க³ப⁴ஸ்தி நேமி: ஸத் வஸ்த்த²:
ஸிம்ஹோ பூ⁴த மஹேஸ்²வர:|
ஆதி³ தே³வோ மஹா தே³வோ
தே³வேஸோ தே³வ ப்⁴ருத்³ கு³ரு:||

  • 487. க³ப⁴ஸ்தி நேமிஸ் - ஒளிரும் சக்கரத்தை ஆயுதமாக கொண்டவர். தனது பிரகாசத்தால் அனைத்தையும் பிரகாசமாக்குகிறார். ஆயிரம் ஆரங்கள் கொண்ட சுதர்சன சக்கரம் உள்ளது. அதை அவர் கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும், தர்மத்தின் பாதையை நோக்கி அனைவரையும் வழிநடத்தவும் பயன்படுத்துகிறார். 
  • 488. ஸத் வஸ்த்த²ஸ் - அடியவர் நெஞ்சில் குடியிருப்பவர். பக்தர்களின் இதயத்தில் வசிப்பவர்.
  • 489. ஸிம்ஹோ - தன் பக்தர்களைத் துன்புறுத்துபவர்களைத் தண்டிப்பவர்.
  • 490. பூ⁴த மஹேஸ்²வரஹ - எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர். பிரபஞ்சத்தின் கர்த்தா. 
  • 491. ஆதி³ தே³வோ - முதல் காரணமாக இருப்பவர். பிரகாசம் கொண்டவர்.
  • 492. மஹா தே³வோ - விளையாட்டாக எதனையும் செய்யும் மகாதேவர். பரம கடவுள். ஆரம்பமும் முடிவும் இல்லாத படைப்பாளி.
  • 493. தே³வேஸோ - தேவர்களுக்கு ஈசன். அனைத்து தேவர்களுக்கும் ஆதரவாளர். உச்சக் கட்டுப்பாட்டாளர். 
  • 494. தே³வ ப்⁴ருத்³ - தேவர்களைத் தாங்குபவர். அனைத்து தேவர்களையும் போஷிப்பவர். அனைத்து அறிவையும் பரப்புபவர்.
  • 495. கு³ருஹு - வேத அறிவை வழங்கும் தேவர்களின் ஆசாரியன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment