||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 11 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 64 - 74
செங்கீரைப் பருவம்
தலையை நிமிர்த்தி முகத்தை அசைத்து ஆடுதல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செங்கீரை பருவம் என்பது குழந்தைகள் ஒரு காலை மடக்கி, மறுகாலை நீட்டி, இரு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடச் சொல்லும் பருவம். குழந்தைகள் ஐந்து மாத தவழும் பருவத்தில் கை கால்களை அசைத்து ஆடும் ஒரு வகையான நடனம்.
கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந்தாள்களையும் தரையில் ஊன்றிக் கொண்டு தலையை நிமிர்த்தி அசைந்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை!' அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலையசைத்து விளையாடிக் காட்டு' என்று வேண்டுகிறாள் அவள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment