About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 December 2023

லீலை கண்ணன் கதைகள் - 73

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் ருக்மிணியின் குழந்தை|

சிவன் சொன்னது போலவே, மன்மதன் கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் மகனாக பிறந்தார். அவனுக்கு அவர்கள் பிரத்யும்னன் என்று பெயர் சூட்டினார்கள். அப்பொழுது சம்பராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவனிடம் கிருஷ்ணரின் மகனால்தான் அவனுக்கு மரணம் என்று யாரோ சொல்லியிருந்தார்கள்.


அதனால் அவன் ஒரு நாள் துவாரகைக்குச் சென்று, யாரும் அறியாமல் கிருஷ்ணனின் அரண்மனைக்குள் நுழைந்தான், பத்து நாள் குழந்தையாக இருந்த பிரத்யும்னனைத் திருடி அந்தக் குழந்தையைக் கடலில் தூக்கி எறிந்து விட்டு, வீடு திரும்பினான். குழந்தையைக் காணவில்லை என்று தெரிந்ததும் ருக்மிணி பட்ட கஷ்டம் சொல்ல முடியாதது.

ஆனால் குழந்தை சாகவில்லை. அது கடலில் எறியப்பட்டதும் அதை ஒரு பெரிய மீன் விழுங்கியது. சில மீனவர்கள் அந்த மீனைப் பிடித்து விட்டார்கள். அது மிகவும் பெரிய மீனாக இருந்ததனால், அதைத் தங்கள் அரசனான சம்பராசுரனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். மீன், அரண்மனையின் சமயலறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அந்தச் சமயலறையில் மாயாதேவி என்ற ஓர் அழகிய பெண் வேலைச் செய்துக் கொண்டிருந்தாள். மீனை அரிந்ததும், சமையற்காரர்கள் அதன் வயிற்றில் ஓர் அழகிய ஆண் குழந்தையைக் கண்டதும், இந்த விஷயத்தை மாயா தேவியிடம் சொல்ல, அவள் அந்தக் குழந்தையின் அழகைக் கண்டு மயங்கி, அதைத் தன் குழந்தை போலவே வளர்க்க ஆரம்பித்தாள்.
பிரத்யும்னன் வளர்ந்து அழகிய சிறுவனாக ஆனான். ஒரு நாள் நாரதர் அங்கு வந்தார். அந்தச் சிறுவனைப் பார்த்து விட்டு அவன் யார் என்று மாயாதேவியை வினவினார். அவன் மீன் வயிற்றில் இருந்த கதையை அவன் சொன்னாள்.

நாரதர் சிரித்தார். அந்தக் குழந்தையைப் பற்றிய உண்மையை அவளிடம் சொன்னார். அத்துடன் அவள் தான் ரதி என்றும், சிவனால் எரிக்கப்பட்ட தன் கணவர் மீண்டும் உடல் பெற்று வர அவள் காத்திருப்பதாகவும் சொல்லிப் போய் விட்டார். சீக்கிரமே, கிருஷ்ணரின் மகள் வளர்ந்து அழகிய இளைஞன் ஆனான். அவனைப் பார்த்த பெண்கள் எல்லோரும் மனச்சஞ்சலம் அடைந்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment