About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 December 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.19 

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் 
யஸ்² சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜா நீதோ 
நாயம் ஹந்தி ந ஹந்யதே||

  • ய - எவனொருவன் 
  • ஏநம் - இந்த ஆத்மாவை 
  • வேத்தி - அறிபவர் 
  • ஹந்தாரம் - கொல்பவன் 
  • யஸ்² - எவனொருவன் 
  • ச - மேலும் 
  • ஏநம்-இந்த 
  • மந்யதே - எண்ணுகிறான் 
  • ஹதம் - கொல்லப்படுகின்றது 
  • உபௌ⁴ - இருவருமே 
  • தௌ - அந்த 
  • ந - இல்லை 
  • விஜா நீதோ - அறிவு 
  • ந - என்றுமில்லை 
  • அயம் - இந்த ஆத்மா 
  • ஹந்தி - கொலை செய்வதோ 
  • ந - இல்லை 
  • ஹந்யதே - கொல்லப்படுவதோ

எவன் ஓருவன் இந்த ஆத்மாவை கொல்பவனாக அறிகிறானோ, எவன் ஓருவன் இந்த ஆத்மா கொல்லப்படுகின்றது என்று எண்ணுகிறானோ, அந்த இருவருமே, அறிவில்லாதவர்கள். இந்த ஆத்மா கொல்லப்படுவதோ, கொலை செய்வதோ இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment