About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 19 November 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி நான்காவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

074 என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே|

உபரிசரன் என்றால் மேலுலகங்களில் சஞ்சரிப்பவன் என்று பொருள். உபரிசரன் வசு என்னும் மன்னன், இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தங்கத் தேரில் மேலுலகம் சென்று வருவான். உபரிசரன் வசு சத்யசீலன், சிறந்த மன்னனாக, தர்மத்தின் வழியில் நாட்டை வழி நடத்தினான். அதனால் தர்ம தேவதை மகிழ்ந்து, வசுக்களைப் போல் அவன் பாதங்கள் பூமியில் படாது வானத்தில் நடக்குமாறு அவனுக்கு வரம் வழங்கினார்.


ஒரு நாள் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் வேள்வியில் பலியிடும் விலங்குகள் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆடு போன்ற விலங்கினை வேள்வித் தீயில் பலியிட்டால் மட்டுமே வேள்வி முழுமைப் பெரும். வேதத்தின் படி, எந்த ஒரு உயிரினையும் கொல்லுதல் பாவம். ஆதலால், ஆடு போன்ற உருவை தானியங்களில் உருவாக்கி அதை யாகத்தில் இட்டனர் ரிஷிகள். இதற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த யாகத்தில் ஆட்டையே இட வேண்டும் என்றனர். வாக்குவாதம் முற்ற, அவர்கள் உபரிசரனை அணுகி, தர்மத்தின் படி தீர்ப்பை வழங்குமாறு வேண்டினர்.

 உபரிசரனை, ஆட்டை உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினான். அதனால் வெகுண்ட முனிவர்கள் அவனை அசுரர்கள் நிறைந்த பாதாள லோகத்தில் புகும் படிச் சபித்தனர். அசுரர்கள் உபரிசரனை பலவகையிலும் துன்புறுத்தினர். ஆனால், இரக்கமில்லாமல் உயிர் பலிக்கு ஆதரவளித்த பாவமே தன்னைப் பாதாள லோகத்தில் தள்ளியது என்பதை உணர்ந்த உபரிச்சரன், திருமாலை உள்ளன்போடு வழிபட்டு, உயிர்களுக்குத் தீங்கு நினையாத வைணவ நெறியே சிறந்தது என்பதை அசுரர்களுக்கு எடுத்துரைத்தார்.

அசுரர்கள் அவரிடம், ‘‘யார் அரக்கர்? யார் வைணவர்?’’ என்று கேட்டதற்கு, அன்று உயிர் பலி கொடுக்க பரிந்துரைத்த என்னைப் போன்றவன் அரக்கன். விஷ்ணுவின் பாதம் வணங்கி, எல்லா உயிரும் ஒன்றென நினைப்பவன் வைஷ்ணவன், ‘‘இன்றைய என்னைப் போல் இருப்பான்’’ என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "உபரிசரன் போல் தன்னையே உதாரணமாக எடுத்துக் காட்டி வைணவ நெறிகளை விளக்கினேனா? இல்லையே! தன்னையே உதாரணம் காட்டும் அளவிற்குத் தன்னால் உயர முடியவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment