||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.14
மாத்ராஸ் பர்ஸா²ஸ்து கௌந்தேய
ஸீ²தோஷ்ண ஸுக² து³:க² தா³:|
ஆக³மா பாயிநோ நித்யா:
தாம் ஸ்திதி க்ஷஸ்வ பா⁴ரத||
- மாத்ராஸ் பர்ஸா²ஸ் - புலன்மய உணர்வு
- து - மட்டுமே
- கௌந்தேய - குந்தியின் மகனே
- ஸீ²த - குளிர்
- உஷ்ண - கோடை
- ஸுக² - சுகம்
- து³ஹ்க² - துக்கம்
- தா³ஹ - தருவது
- ஆக³ம - தோன்றுகின்ற
- அபாயிநோ - மறைகின்ற
- அநித்யாஹ - நிலையற்ற
- தாந் - அவற்றையெல்லாம்
- ஸ்திதி க்ஷஸ்வ - பொறுத்துக் கொள்ள முயற்சி செய்
- பா⁴ரத - பரதகுலத் தோன்றலே
குந்தியின் மகனே! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப் போக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன. எனவே, பரத குலத் தோன்றலே! இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment