||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
016. திருக்கண்ணமங்கை
க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 14 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 14 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) -12 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1638 - 1647 - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1848 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2008 - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்
2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா*
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில்*
வண்ணம் அம்கை கண் கால் வனசம் திரு அரங்கம்*
கண்ணமங்கை ஊர் என்று காண்*
- நெஞ்சே - மனமே!
- கருத்தினால் - மனத்தினாலும்
- வாக்கினால் - வாக்கினாலும்
- நால் மறையும் - நான்கு வேதங்களும்
- காணா - கண்ட றிய முடியாத
- ஒருத்தனை - ஒப்பற்ற திருமாலை
- நீ உணரின் - நீ அறிய விரும்பினால், அவனுக்கு
- வண்ணம் - திருமேனி நிறம்
- பெருத்த முகில் - பெரிய காளமேகமாம்
- அம் கை - அழகிய திருக்கைகளும்
- கண் - திருக்கண்களும்
- கால் - திருவடிகளும்
- வனசம் - செந்தாமரை மலர்களாம்
- ஊர் - இருப்பிடம்
- திருவரங்கம் - ஸ்ரீரங்கமும்
- கண்ணமங்கை - திருக்கண்ணமங்கையுமாம் என்று
- காண் - அறிவாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment