About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 17 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 32

பூ⁴த ப⁴வ்ய ப⁴வந் நாத²: 
பவந: பாவநோ நல:|
காமஹா காம க்ருத் காந்த: 
காம: காம ப்ரத³ ப்ரபு⁴:||

  • 291. பூ⁴த ப⁴வ்ய ப⁴வந் நாத²ஃ - முக்காலங்களிலும் உள்ளவற்றுக்குத் தலைவன்.
  • 292. பவநஃ - சஞ்சரிப்பவன்.
  • 293. பாவநோ - தூய்மை அளிப்பவன்.
  • 294. நலஹ - அருள் புரிவதில் திருப்தி அடையாதவன்.
  • 295. காமஹா - ஆசைகளைப் போக்குபவன்.
  • 296. காம க்ருத் - ஆசைகளை பக்தர்களுக்கு வளர்ப்பவன்.
  • 297. காந்தஹ் - விரும்பப் படுபவன்.
  • 298. காமஹ் - ஆசைப்படத்தகுந்தவன்.
  • 299. காம ப்ரத³ - விருப்பங்களைக் கொடுப்பவன்.
  • 300. ப்ரபு⁴ஹு - பிரபுவாய் இருப்பவன்

மூன்றாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment