||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.47
ஸஞ்ஜய உவாச|
ஏவ முக்த் வார்ஜுந: ஸங்க்²யே
ரதோ² பஸ்த² உபா விஸ²த்|
விஸ்ரு ஜ்ய ஸஸ²ரம் சாபம்
ஸோ²க ஸம் விக்³ந மாநஸ:||
- ஸஞ்ஜய: உவாச - ஸஞ்ஜயன் கூறினான்
- ஏவம் - இவ்வாறாக
- உக்த்வா - சொல்லி
- அர்ஜுநஸ் - அர்ஜுநன்
- ஸங்க்²யே - போர்க்களத்தில்
- ரதோ² - ரதத்தின்
- பஸ்த² - இருக்கையில்
- உபா விஸ²த்து - மீண்டும் அமர்ந்தான்
- விஸ்ரு ஜ்ய - தனியே எறிந்து விட்டு
- ஸஸ²ரம் - அம்பையும்
- சாபம் - வில்லையும்
- ஸோ²க - சோகத்தால்
- ஸம் விக்³ந - துன்பப்பட்டு
- மாநஸஹ - மனதிற்குள்
ஸஞ்ஜயன் கூறுகிறார்: இவ்வாறாக சொல்லிய அர்ஜுநன், போர்க்களத்தில் அம்புகளுடன் வில்லையும் தனியே எறிந்து விட்டு, ரதத்தின் இருக்கையில் மீண்டும் அமர்ந்து விட்டு சோகத்தால் மனதிற்குள் துன்பப்பட்டான்.
||ஓம் தத் ஸதி³தி ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா ஸூப நிஷத்ஸு
ப்³ரஹ்ம வித்³யாயாம் யோக³ ஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம் வாதே³
அர்ஜுந விஷாத³ யோகோ³ நாம ப்ரத²மோ அத்⁴யாய꞉|| - 1
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அர்ஜுந விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம் நிறைவுற்றது.
பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுநன் யுத்தகளத்தை கண்ட உடன் பதற்றம் அடைந்தான். அந்த பதற்றத்திற்கு காரணம் அவனுக்கு இந்த உலகத்தின் (அல்லது ) பிரபஞ்சத்தின் பூரண உண்மை தெரியாததால் அவன் அவ்வாறு பதற்றத்துக்கு உள்ளானான். தர்மதிற்கான யுத்தத்தில் தனது உறவினர்களும் கொல்லபடுவார்களே என்று அஞ்சினான். இவ்வாறு அஞ்சி நடுங்கி கொண்டு இருந்த அர்ஜுநனுக்கு பகவான் கிருஷ்ணர் பூரண உண்மையை கூறி அவனது புத்தியை விழித்தெழ செய்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment