||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 45 - சிவபெருமான் அளித்த அரைவடம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
உடையார் கன மணியோடு*
ஒண் மாதுளம் பூ*
இடை விரவிக் கோத்த*
எழிற் தெழ்கினோடு*
விடையேறு காபாலி*
ஈசன் விடு தந்தான்*
உடையாய்! அழேல் அழேல் தாலேலோ*
உலகம் அளந்தானே! தாலேலோ|
- உடை ஆர் - திருவரைக்குச் சேரும் படியான (இடுப்புக்குத் தகுந்த)
- கனம் மணியோடு - பொன் மணியையும்
- இடை - நடு நடுவே
- விரவி - கலந்து
- கோத்த - கோர்க்கப்பட்ட
- எழில் - அழகிய
- தெழ்கினோடும் - இடைச் சரிகையையும்
- ஒண் - அழகிய
- மாதுளம்பூ - மாதுளம்புக் கோவையான சங்கிலியையும்
- விடை ஏறு - ரிஷப வாஹகனான
- காபாலி - கபாலதாரியான
- ஈசன் - ருத்ரன்
- விடுதந்தான் - உனக்கு அனுப்பி வைத்தான்
- உடையாய் - அனைத்தையும் உடைய கண்ணனே!
- அழேல் அழேல் - அழாதே அழாதே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
- உலகம் அளந்தானே! - உலகளந்த திருவிக்கிரமனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
ரிஷப வாகனத்தை உடையவனும், கபாலி என்ற பெயருடையவனும், அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவனுமான சிவன், பொன் மணிகளை நடு நடுவே கலந்து கோக்கப்பட்ட இடுப்பில் அணியக் கூடிய சரிகையையும், மாதுளம்புக் கோவை என்கிற அரை வட்டமும் கொடுத்தனுப்பி உள்ளான். கண்ணா! அதைப் பெற்றுக் கொள். அழாதே, அழாதே, கண்ணுறங்கு, உலங்கமளந்தானே, கண்ணுறங்கு. (பிரம்மாவினுடைய ஐந்து தலைகளில் ஒன்றை பறித்ததினால் சிவனுக்கு காபாலி என்று பெயர். ஈசன் என்பதன் ஒரு பொருள் அஷ்ட ஐஸ்வர்யங்களை உடையவன்)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment