||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.31
தயா விலஸி தேஷ் வேஷு
கு³ணேஷு கு³ணவாந் இவ|
அந்த: ப்ரவிஷ்ட ஆபா⁴தி
விஜ்ஞா நேந விஜ்ரும் பி⁴த:||
- தயா - அந்த மாயையால்
- விலஸி தேஷ் - உண்டாகிய
- வேஷு கு³ணேஷு - ஆகாசம் முதலியவைகளில்
- அந்தஃ ப்ரவிஷ்ட - உட் புகுந்தவராய்க் கொண்டு
- கு³ணவாந் இவ - எனக்குள் அடங்கியவையே இவை என்று எண்ணுகிறவர் போல்
- விஜ்ஞா நேந - சித் என்னும் சக்தி ஸ்வரூபத்தால்
- விஜ்ரும் பி⁴தஹ - உயர்ந்தவராகக் கொண்டு
- ஆபா⁴தி - விளங்குகிறார்
அந்த மாயையால் உண்டான எல்லாப் பொருள்களிலும் பகவானே உட்புகுந்து நிறைந்து விளங்குவதால் குணமுள்ளவன் போல் தோற்றமளிக்கிறான். உண்மையில், அவன் முற்றிலும் நிறைவான ஞானானந்தச் செறிவானவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment