About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 17 October 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 10
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ஶ்ரீராம த்⁴யானம்

வைதே³ஹீ ஸஹிதம் ஸுரத்³ரு மதலே ஹைமே மஹா மண்ட³பே
மத்⁴யே புஷ்பக மாஸனே மணி மயே வீராஸனே ஸுஸ்தி²தம்|
அக்³ரே வாசயதி ப்ரப⁴ஞ்ஜந ஸுதே தத் த்வம் முநிப்⁴ய꞉ பரம்
வ்யாக்²யாந்தம் ப⁴ரதாதி³பி⁴꞉ பரி வ்ருதம் ராமம் ப⁴ஜே ஸ்²யாமளம்||

  • வைதே³ஹீ ஸஹிதம் - சீதையுடன் கூட
  • ஸுரத்³ரு மதலே - கல்பக வனத்தில்
  • ஹைமே - தங்க மயமான
  • மஹா மண்ட³பே- மண்டபத்தில்
  • மணி மயே- ரத்தினங்கள் பதித்த
  • புஷ்பக மாஸனே - புஷ்பக விமானத்தின்
  • மத்⁴யே - நடுவில்
  • வீராஸனே - வீராசனத்தில்
  • ஸுஸ்தி²தம் - நன்கு அமர்ந்து இருப்பவரும்
  • அக்³ரே - முன்னால்
  • ப்ரப⁴ஞ்ஜந ஸுதே - ஹனுமனுடனும்
  • முநிப்⁴யஃ - முனிவர்களுக்கு
  • தத் த்வம்- தத்துவத்தை
  • வாசயதி - கூறி
  • வ்யாக்²யாந்தம் - விளக்குபவரும்
  • ப⁴ரதாதி³பி⁴ஃ - பரதன் முதலியவர்களால்
  • பரி வ்ருதம் - சூழப்பட்டவரும் ஆன
  • ஸ்²யாமளம் - நீலநிறம் கொண்ட
  • ராமம் - ராமனைத்
  • ப⁴ஜே - தொழுகிறேன்

சீதையுடன் கூட கல்பக வனத்தில் தங்க மயமான மண்டபத்தில் ரத்தினங்கள் பதித்த புஷ்பக விமானத்தின் நடுவில் வீராசனத்தில் நன்கு அமர்ந்து இருப்பவரும் முன்னால் ஹனுமனுடனும் முனிவர்களுக்கு தத்துவத்தை கூறி விளக்குபவரும் பரதன் முதலியவர்களால் சூழப்பட்டவரும் ஆன நீல நிறம் கொண்ட ராமனைத் தொழுகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment