About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 24 October 2023

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 110 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 110 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 106 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1329 - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி -  இரண்டாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1470 - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1478 - 1487 - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1488 - 1497 - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்  
  • திவ்ய ப்ரபந்தம் - 1498 - 1507 - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1508 - 1517 - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1518 - 1527 - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1528 - 1537 - ஆறாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1538 - 1547 - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1548 - 1557 - ஏழாம் பத்து - முதலாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1558 - 1567 - ஏழாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1568 - 1577 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1611 - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1659 - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1852 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2067, 2068 - இரண்டாம் திருமொழி - 6 & 7 பாசுரங்கள் (16, 17)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2753 - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம் (41) 
  • திவ்ய ப்ரபந்தம் - 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
செய்ய சடையோன் திசை முகத்தோன் வானவர் கோன்*
ஐயம் அறுத்து இன்னம் அறியாரே துய்ய*
மரு நறை ஊர் வண் துழாய் மாயோன் செவ் வாயான்*
திரு நறையூர் நின்றான் செயல்*

  • துய்ய - பரிசுத்தமாகிய
  • மரு நறை ஊர் வள் துழாய் - நறுமணமும் தேனும் பொருந்திய செழிப்பான திருத்துழாயை அணிந்த
  • மாயோன் - ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை உடையவனும்
  • செவ் வாயோன் - செந் தாமரை மலர் போலச் சிவந்த திருவதரத்தை உடையவனும்
  • திருநறையூர் நின்றான் - திருநறையூர் என்னும் ஸ்தலத்தில் நின்ற திருக்கோலமாக எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானது
  • செயல் - செய்கையைப் பற்றி
  • செய்ய சடையோன் - செந்நிறமான கபர்த்தம் என்னும் சடையை உடைய சிவபிரானும்
  • திசை முகத்தோன் - நான்கு திக்கையும் நோக்கிய நான்கு முகங்களை உடைய பிரமனும்
  • வானவர் கோன் - தேவர்கட்கெல்லாம் தலைவனான இந்திரனும்
  • ஐயம் அறுத்து - சந்தேகத்தை ஓழித்து நிஸ்ஸந் தேஹமாய்
  • இன்னம் அறியார் - இன்னமும் அறிய மாட்டார்கள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment