||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
----------
- அம்சம் - நித்யஸூரி குமுதர்
- அவதார ஸ்தலம் - திருக்கோளூர்
- காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
- வருடம் - ஈஸ்வர - த்வாபர யுகம்
- மாதம் - சித்திரை
- திரு நக்ஷத்திரம் - சித்திரை
- திதி - வளர்பிறை சதுர்த்தசி
- கிழமை - வெள்ளி
- ஆசார்யன் - நம்மாழ்வார்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
- அருளிச் செய்தவை - 1. கண்ணினுண் சிறுத்தாம்பு - முதலாம் ஆயிரம் - 937-947
- பாசுரங்கள் - 11
----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச ஸ்தலங்கள்
அவர் எந்த திவ்ய தேசத்திற்கும் பாடவில்லை
----------
பிற பெயர்கள்
இன்கவியார், ஆழ்வாருக்கு அடியான்
----------
நம்மாழ்வாரையே தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டு வைணவத்தின் எல்லை நிலமாக கருதப்படும் பாகவத சேஷத்வத்தில் ஊன்றி அருளிச் செய்யும் பிரபந்தம் கண்ணிநுண் சிறுத்தாம்பு. நம்மாழ்வார் என்று திருநாமத்தை உச்சரித்த அளவில் நாவில் அமுதம் ஊறுகிறது. வேறொரு தெய்வத்தை நாடாமல் நம்மாழ்வாரின் அருளிச் செயல்களையே பாடி கொண்டுத் திரிவேன். நம்மாழ்வாரே எனக்கு தாயாகவும், தந்தையாகவும், தலைவராகவும் இருந்து என்னை தன் கருணைக்கு பாத்திரம் ஆக்கினார். வேதத்தின் உள் பொருட்களைப் பாடியதோடு அல்லாமல் என்னுடைய நெஞ்சிலே படியும் படி என்னைத் திருத்தி பணி கொண்டார். எம்பெருமானை ஆச்ரயித்த பாகவதர்கள் அனைவரிடமும் பக்தியுடைய நம்மாழ்வாரிடம் பக்தி கொண்டு அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை உறுதியான நம்பிக்கையுடன் அனுசந்திப்பவர்கள் பரம பதத்தில் வஸிக்க பெறுவர் என்று பிரபந்தத்திற்கு பயனைக் கூறுகிறார்.
----------
தனியன்
அவிதித விஷயாந்தரஸ் ஸ²டாரேர்
உபநிஷதாம் உபகான மாத்ர போக:|
அபி ச குண வசாத் ததேக ஸே²ஷி
மதுர கவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து||
தனியனின் விளக்கம்
நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், நம்மாழ்வார் பாசுரம் தவிர வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான மதுரகவி ஆழ்வார் அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.
வாழி திருநாமம்
சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே|
உத்தர கங்கா தீரத் துயர் தவத்தோன் வாழியே|
ஒளி கதிரோன் தெற்கு உதிக்க உகந்து வந்தோன் வாழியே|
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே|
பராங்குசனே பரன் என்று பற்றினான் வாழியே|
மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே|
மதுரகவி திருவடிகள் வாழி வாழி வாழியே||
திருநாள் பாட்டு
1. ஏரார் மதுரகவி* இவ்வுலகில் வந்துதித்த*
சீராரும் சித்திரையில் சித்திரை நாள்*
பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள்* வந்துதித்த நாள்களிலும்*
உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்!
2. வாய்த்த திருமந்திரத்தின்* மத்திமமாம் பதம் போல்*
சீர்த்த மதுரகவி செய் கலையை*
ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள்*
அருளிச்செயல் நடுவே* சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment