||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
- அம்சம் - கௌமோதகம் (கதை)
- அவதார ஸ்தலம் - திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் - அயோநிஜர் (சுயம்பு)
- காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு
- வருடம் - சித்தார்த்தி
- மாதம் - ஐப்பசி
- திரு நக்ஷத்திரம் - அவிட்டம்
- திதி - ஐப்பசி வளர்பிறை நவமி
- கிழமை - புதன்
- ஆசார்யன் - ஸேனை முதலியார்
- அருளிச் செய்தவை - 1. இரண்டாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2182-2281
- பாசுரங்கள் - 100
----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச
ஸ்தலங்கள் - 14; பாசுரங்கள் - 31
- திருவரங்கம் 4 பாசுரங்கள்
- திருக்குடந்தை 2 பாசுரங்கள்
- திருத்தஞ்சை மாமணிக் கோயில் 1 பாசுரம்
- திருக்கோவிலூர் 1 பாசுரம்
- திருக்கச்சி 2 பாசுரங்கள்
- திருத்தண்கா 1 பாசுரம்
- திருப்பாடகம் 1 பாசுரம்
- திருநீர்மலை 1 பாசுரம்
- திருக்கடல் மல்லை 1 பாசுரம்
- திருத்தங்கல் 1 பாசுரம்
- திருமாலிருஞ்சோலை 3 பாசுரங்கள்
- திருக்கோஷ்டியூர் 2 பாசுரங்கள்
- திருவேங்கடம் 9 பாசுரங்கள்
- திருப்பாற்கடல் 2 பாசுரங்கள்
----------
பிற பெயர்கள்
பூத யோகி, ஓடித் திரியும் யோகிகள்
----------
உபய விபூதி நாயகனான ஸ்ரீமந் நாராயணனை தம் பக்தியால் தியானித்து, பக்தி பரவசத்தால் பக்குவம் அடைந்து, உண்மை அறிவை உபதேசிக்கிறார். ஞான ஸ்வரூபமான ஆத்மா, அவனிடம் கொண்ட பக்தியில் உருகி கரைந்து, தான் பகவானுக்கு தாஸபூதன் என்று அறியாமல் போனாலும், அவனை நம் மனதில் ஸ்திரமாக குடியேறும் படி செய்வதே நமக்கு சகல இஷ்டங்களையும் அருளும். மேட்டு நிலத்தை தடாகமாக்கி மழை நீரை சேமிக்க தகுந்த பாத்திரமாகச் செய்ய வேண்டும் என்பதை நமக்கு காட்டி தருகிறார்.
வேதத்தின் பொருளை அறியாதவர்கள் கலங்க வேண்டாம். புருஷோத்தமனான பகவானின் திருநாமத்தை துதிப்பதே வேதத்தின் ஸாரமான பொருள் என்பதை அறிவீர் என்று உபதேசிக்கிறார். ஆதிமூல காரணமான பகவானின் திருவடிகளில் மன்னிக்கிடப்பவர்களின் பாதங்களை தொழுவதே தன் கரங்களின் உயர்ந்த செயலாக கருதுகிறார். கண்ணனே நம் பாவங்களுக்கு சத்ரு என்ற திட நம்பிக்கை கொண்டு வணங்குவோம் என்று உபதேசிக்கிறார்.
----------
தனியன் 1
துலா த⁴நிஷ்ட² ஸம்பூ⁴தம்
பூ⁴தம் கல்லோல மாலிநம்|
தீரே பு²ல்லோத் பலே
மல்லாபுர்ய மீடே³ க³தா³ம் ஸ²கம்||
தனியன் 2
மல்லாபுர வராதீஸ²ம்
மாதவீ குஸுமோத் பவம்|
பூதம் நமாமி யோ விஷ்ணோர்
ஜ்ஞாந தீபம் அகல் பயத்||
தனியனின் விளக்கம்
திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால் நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.
வாழி திருநாமம்
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே|
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே|
நன்புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே|
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே|
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே|
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே|
பொன் புரையும் திருவரங்கர் புகழ் உரைப்போன் வாழியே|
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே||
திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்*
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!
2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த*
பெற்றிமையோர் என்று*
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்றது உலகத்தே நிகழ்ந்து*
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment