About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 June 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 141

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 3

வேதா³ந்தகோ³ ப்³ராஹ்மண: ஸ்யாத் 
க்ஷத்ரியோ விஜயீ பவேத்|
வைஸ்²யோ த⁴ ஸம்ருத்³த⁴: ஸ்யாத் 
ஸூ²த்³ர: ஸுக² மவாப்நுயாத்||


ப்ராஹ்மண: - ப்ராஹ்மணஸ்
ஸம்ருத்த: - ஸம்ருத்தஸ்
ஸூ²த்ர: - ஸூ²த்ரஸ்

இதை ஒரு பிராமணன் பாராயணம் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் பாராயணம் செய்தால் அவன் எப்போதும் போர்க் களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் பாராயணம் செய்தால் அவன் செல்வச் செழிப்படைவான். ஒரு சூத்திரன் பாராயணம் செய்தால் அவன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.5 

ந ஹி கஸ்²சித் க்ஷணமபி 
ஜாது திஷ்ட²த்ய கர்ம க்ருத்|
கார்யதே ஹ்யவஸ²: கர்ம 
ஸர்வ: ப்ரக்ருதி ஜைர் கு³ணை:||

  • ந - இல்லை 
  • ஹி - நிச்சயமாக  
  • கஸ்²சித் - யாருமே 
  • க்ஷணம் - ஒரு கணம் 
  • அபி - கூட 
  • ஜாது - எவ்வேளையிலும் 
  • திஷ்ட²தி - இருப்பது 
  • அகர்ம க்ருத் - ஒன்றும் செய்யாமல் 
  • கார்யதே - வற்புறுத்துப்படுகின்றனர் 
  • ஹி - நிச்சயமாக 
  • அவஸ²ஸ் - சுதந்திரமின்றி  
  • கர்ம - செயல் 
  • ஸர்வஃ - எல்லாம்  
  • ப்ரக்ருதிஜைர் - பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய  
  • கு³ணைஹி - குணங்களால்

எவரும் ஒரு கணம் கூட ஒன்றும் செய்யாமல் இருப்பது இல்லை. எல்லாம் பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் சுதந்திரமின்றி செயல்பட வற்புறுத்தப் படுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.31

கிம் வா பா⁴க³வதா த⁴ர்மா 
ந ப்ராயேண நிரூபிதா:|
ப்ரியா: பரம ஹம்ஸா நாம் 
த ஏவஹ் யச்யுத ப்ரியா:|| 

  • பா⁴க³வதா - பகவத் ஸம்மந்தமான
  • த⁴ர்மா - தருமங்கள் யாவும் 
  • ப்ராயேண - அநேகமாக 
  • ந  நிரூபிதாஹ - நிரூபிக்கப்படவில்லை 
  • கிம் வா - போலும் 
  • தே ஏவ ஹி -   அந்த பகவத் ஸம்மந்தமான தருமங்கள் அல்லவா   
  • பரம ஹம்ஸா நாம் - பரம ஹம்ஸர்களுக்கு 
  • ப்ரியாஃ - ப்ரியமானவை   
  • அச்யுத ப்ரியாஹ -  ஸ்ரீ பகவானுக்கும் ப்ரியமானவை

நான், ஒருக்கால் பகவானைப் பற்றிய பாகவத தர்மங்களைச் சரிவர விளக்கவில்லையோ! அந்த பகவானைப் பற்றிய தர்மங்கள் அல்லவா, பரம பக்தர்களுக்கு உகந்தவை. அவர்கள் உகப்பதைத் தானே பகவானும் உகப்பன்?' அதாவது, பக்தர்கள் விருப்பமேயன்றோ, பகவானது விருப்பம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.76

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.76

அஸ்த்ரே ணோந் முக்தமாத் மாநம் 
ஜ்ஞாத்வா பைதா மஹாத்³ வராத்|
மர்ஷயந் ராக்ஷஸாந் வீரோ 
யந்த்ரிண ஸ்தாந் யத்³ ருச்ச²யா|| 

  • வீரோ - சூரரான
  • பைதா மஹாத்³ - பிரம்ம தேவரின்
  • வராத் - வரத்தால் 
  • ஆத்மாநம் - தன்னை
  • யத்³ ருச்ச²யா - ப்ரயத்தனமின்றி 
  • அஸ்த்ரேண - அஸ்திரத்தினால் 
  • உந் முக்தம் - விடுபட்டதாக 
  • ஜ்ஞாத்வா - அறிந்து 
  • யந்த்ரிணஸ் - கயிற்றை கட்டினவர்களான
  • தாந் - அந்த
  • ராக்ஷஸாந் - ராக்ஷசர்களை 
  • மர்ஷயந் - க்ஷமித்துக் கொண்டு

சூரரான ஹனுமான், பிதா மஹரின் {பிரம்மரின்} வரத்தால் அஸ்திரத்தில் இருந்து விடுபட்டதை அறிந்தும், தன் விருப்பத்தின் பேரில் ராட்சசர்களின் கட்டுகளைப் பொறுத்துக் கொண்டு, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 2.1 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி – 10 பாசுரங்கள்

கண்ணன் அப்பூச்சி  காட்டி விளையாடுதல்

கலித்தாழிசை

சிறு குழந்தைகளின் செயல்களுள் பூச்சி காட்டுதல் ஒன்று. அவ்வாறு கண்ணனும் பூச்சி கட்டி விளையாடுகிறான். கோபியர்கள் குழந்தையின் செயலைக் கண்டு களிக்கிறார்கள். 


ஆழ்வாரும் பக்தியின் மேலீட்டால் அவ்விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வது போல் அநுபவித்து இன்பம் அடைகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாத பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ரங்கநாதன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மீ ரங்கர்
  • பெருமாள் உற்சவர்: பள்ளி கொண்ட ரங்கநாதர்
  • தாயார் மூலவர்: செங்கமலவல்லி
  • தாயார் உற்சவர்: செண்பகவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: சூரிய 
  • விமானம்: வேத
  • ப்ரத்யக்ஷம்: செங்கமல நாச்சியார், அநந்தன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

கருவறையில் லக்ஷ்மி நாராயணர், ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தான கோபால கிருஷ்ணன் ஆகியோரும் அருள் பாலிகின்றனர். செங்கமலவல்லி தாயார் தனி ஸந்நதியில் உள்ளார். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி 12 ஆழ்வார்கள், அனுமன், சக்கரத்தாழ்வார்கள் காட்சியளிக்கின்றனர்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலம் மட்டும் தான் "அம்பலம்' என அழைக்கப் படுகிறது. திருநாங்கூரில் "பள்ளி கொண்ட பெருமாள் கோயில்' என்றால் தான் அனைவருக்கும் தெரியும். திருநாங்கூர் வந்த 11 பெருமாள்களில், இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆவார். இவரை வணங்கினால் ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கியதற்கு சமம். கிழக்கு பார்த்த இத்தலத்தில் பெருமாள் ஆதிசேஷன் மீது நான்கு புஜங்களுடன் பள்ளி கொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார். தலையும், வலது கையும் மரக்கால் மேல் வைத்து கொண்டு, இடது கரத்தை இடுப்பின் மீது வைத்து கீழே தொங்கவிட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது தலைப் பக்கம் ஸ்ரீதேவியும், பாதத்தில் பூமாதேவியும் வீற்றிருக்கின்றனர்.

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலக்ஷ்மி, "பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்க போவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,''என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், "பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?'' என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், "பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் "பலாசவனம்" சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,'' என்றார். அத்துடன் கலியுகத்தில் இத்தலம் "திருத்தெற்றியம்பலம்' என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரக்ஷிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,'' என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலக்ஷ்மியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலக்ஷ்மி, ஆதிசேஷனுக்கு அருள் புரிந்தார். பின் அங்கேயே போர் புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் "செங்கண்மால் ரங்கநாதர்' என்றழைக்கப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 85

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 30

ஸ்கந்தம் 03

கபிலர் தொடர்ந்து தத்வங்களை விளக்கினார்.

தாயே! அஹங்கார தத்வத்தின் ரூபம் ஸங்கர்ஷணன் ஆவார். இதுவே இந்திரிய அபிமானம் உள்ளவர்களித்தில் செய்கையின் காரணமாகத் தென்படுகிறது.‌ ஸத்வகுணங்களோடு அமைதியாகவும், ரஜோகுணம் மேலிட்டால் கோரமாகவும், தமோகுணங்களைக் கொண்டு மடமையாகவும் நிற்பது இதுவே.

ஸாத்வீக அஹங்காரமே மனஸ் தத்வம் உண்டாகக்‌காரணம். மனஸ் தத்வமே இந்திர்யங்களின் அதிஷ்டான தேவதையான அனிருத்தன் என்று அழைக்கப்படுகிறது.

ராஜஸ அஹங்காரம்‌ மாறுதல் அடைந்து புத்தி தத்வம் தோன்றியது. கண்ணுக்குப் புலனாகும் விஷயங்களைப் புரிந்துகொள்வது, இந்திரியங்களை அதன் தொழிலில் ஊக்குவிப்பது, உலகியல் பொருள்களில் தோன்றும் மாற்றத்தை ஆராய்வது இவை புத்தியின் காரியங்களாம்.

ஐயப்பாடு(சம்சயம்), தவறாகப் புரிந்துகொள்வது (விபர்யயம்),உள்ளது உள்ளபடி அறிந்துகொள்வது (நிச்சயம்), ஞாபக சக்தி (ஸ்ம்ருதி), தூக்கம் (நித்திரை), ஆகியவையும் புத்தியின் இலக்கணங்களே. இந்த புத்தி தத்வமே பகவானது மூன்றாவது வியூகமான ப்ரத்யும்னன் எனப்படுகிறது.

கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் இதிலிருந்து தோன்றின. செயல்‌, அறிவு என்ற பிரிவினால் இருவகை இந்திரியங்களாயின. இதில்‌ செயல் ப்ராணனின் சக்தி, அறிவு புத்தியின் திறன்.

பகவானின் சைதன்யத்தின் தூண்டுதலால் தாமஸ அஹங்காரம்‌ மாறுதல் அடைந்தது. அது சப்த தன்மாத்திரையைத் தோற்றுவித்தது. சப்தத்திலிருந்து ஆகாயமும், ஒலியை அறியும் காது என்ற புலனும் தோன்றின.

கண்களால் காணமுடியாமல் மறைந்திருக்கும்‌ பொருளின் தன்மையையும், பெயரையும் புத்திக்குத் தெரிவிப்பது ஒலி. ஒலி வடிவான சாஸ்திரங்களின் வாயிலாக பகவானைக் காட்டித் தரக்கூடியது. இது ஆகாயத்தின் நுண்ணிய வடிவாகும்.

அனைத்து ஜீவன்களிலும் உள்ளும் புறமாக நிரம்பி இருப்பது ஆகாயமாகும். இந்திரியங்களுக்கும், ஆன்மாவிற்கும் இருப்பிடமாக விளங்குவது ஆகாயமே.

சப்த தன்மாத்திரையை இயல்பாக உடைய ஆகாயம் காலத்தினால் மாற்றமடைந்து ஸ்பர்ச தன்மாத்திரை உண்டாயிற்று. அதிலிருந்து வாயு தோன்றியது. தொடுவுணர்ச்சியை நமக்குத் தரும்‌ தோல் என்ற புலன் உண்டாயிற்று. மென்மை, கடினம், குளிர்ச்சி, சூடு ஆகியவை தொடு உணர்ச்சியின் இயல்புகள். வாயுவின் நுண்ணிய சக்தி இதுவே. மரம் செடி கொடிகளை அசைத்தல், எங்கும்‌ உலாவுதல், வாசனை, நாற்றம் முதலியவற்றை மூக்கிற்கு எடுத்துச் செல்லுதல், அனைத்துப் புலன்களுக்கும் செயல் ஊக்கத்தை அளித்தல் ஆகியவை வாயுவின் செயல்கள். 


அதன் பின்னர், காலரூபியான பகவானால்‌ தூண்டப்பட்டு‌ ஸ்பர்ச தன்மாத்திரையான வாயு மாறுதல் அடைந்து அதிலிருந்து ரூப தன்மாத்திரை தோன்றியது. அதிலிருந்து ஒளியும் உருவத்தைக் காட்டித்தரும் கண்கள் என்னும் புலனும் தோன்றின.

பொருள்களின் உருவத்தைக் காட்டுதல், பொருளின் அமைப்பாகவே இருத்தல், ஒளியின் குணமாக இருத்தல் ஆகியவை ரூப தன்மாத்திரையின் இலக்கணங்கள்.

வெளிச்சம் தருவது, வேக வைப்பது, ஜீரணிப்பது, குளிரைப் போக்குவது, பசி தாகம் உண்டுபண்ணுவது அதற்காகச் சாப்பிடுவது, பருகுவது ஆகியவை அக்னியின் காரியங்கள்.

அதன் பின் ரூப தன்மாத்திரையான அக்னியிலிருந்து ரஸ தன்மாத்திரை தோன்றியது. அதிலிருந்து நீரும், நாக்கு என்ற புலனும் தோன்றின. ரஸம் என்பதே மதுரம்‌ என்ற சுவை. அதனுடன் சேரும்‌ பொருள்களின் வேறுபாட்டால் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்ற சுவைகள் பிரித்துக் காட்டப்படுகின்றன.

பிறவற்றை ஈரமாக்குதல், பிரிந்திருப்பதை ஒன்றாக்குதல், போதும் ‌என்ற மனநிறைவு கொளல், ப்ராணனை நிலைக்கச் செய்தல், பசி தாகத்தால் விளையும் சோர்வை நீக்குதல், வெம்மையைக் குறைத்தல், கிணறு முதலியவற்றிலிருந்து இறைக்க இறைக்க ஊறுதல் ஆகியவை நீரின் காரியங்கள்.

பகவானால்‌ தூண்டப்பட்டு ஜல தத்வத்திலிருந்து தோன்றியது கந்தம் (வாசனை). அந்த தன் மாத்திரையிலிருந்து ப்ருத்வி என்னும்‌ மஹாபூத்ம் தோன்றியது. இந்த கந்தத்தை அறிவிப்பது கிராணேந்திரிய்ம் (மூக்கு) ஆகும். கந்தம் என்பது ஒன்றாக இருப்பினும் பல்வேறு பொருள்களின்‌ சேர்க்கையால் கலப்பான‌ மணம், துர் நாற்றம், நறுமணம், சாரம் (நெடி), புளிப்பு மணம் எனப் பலவாறு வேறுபடுகிறது.

விக்ரஹம், பொம்மை முதலிய உருவங்களால் , ப்ரும்மத்திற்கு ஓர் உருவத்தை காட்டுவது, ஆதாரமற்ற போதிலும் நிலையாய் நிற்றல்,‌ அசையும்‌ அசையாப் பொருள்களின் ஆதாரமாதல், ஆகாயத்தை ஒரு நிலைக்குள்‌ அடக்குதல் (குடத்துக்குள் ஆகாயம்), குணங்களைப் பிரித்துக்‌காட்டுதல் ஆகியவை பூமியின்‌ காரியங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Sunday, 9 June 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 140

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 2

ய இத³ம் ஸ்²ருணு யாந்நித்யம் 
யஸ்²சாபி பரி கீர்தயேத்|
நா ஸு²பம் ப்ராப்நுயாத் கிஞ்சித்
ஸோ முத்ரேஹ ச மாவ꞉|| 


மாவ꞉ - மா

இந்தப் பெயர்களை ஒவ்வொரு நாளும் கேட்பவரும், கீர்த்தனம் செய்பவரும் இந்த பிறவியிலும் மறுபிறவியிலும் ஒருபோதும் யாதொரு கெடுதலையும் அடைய மாட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.4 

ந கர்மணா மநா ரம்பா⁴ந் 
நைஷ் கர்ம்யம் புருஷோஸ்² நுதே|
ந ச ஸந்ந்யஸ நாதே³வ 
ஸித்³தி⁴ம் ஸமதி⁴ க³ச்ச²தி||

  • ந - இல்லை 
  • கர்மணாம் - விதிக்கப்பட்ட கடமைகளை  
  • அநா ரம்பா⁴ந் - செயலாற்றாமல்  
  • நைஷ் கர்ம்யம் - விளைவுகளிலிருந்து  
  • புருஷ - மனிதன் 
  • அஸ்² நுதே - அடைகிறான் 
  • ந - இல்லை 
  • ச - மற்றும் 
  • ஸந்ந்யஸ நாத்³ - துறவால் 
  • ஏவ - வெறுமே 
  • ஸித்³தி⁴ம் - வெற்றி 
  • ஸமதி⁴ க³ச்ச²தி - அடைகிறான்

மனிதன் விதிக்கப்பட்ட கடமைகளை செயலாற்றாமல் விளைவுகளிலிருந்து விடுதலை அடைவதில்லை. மற்றும் வெறும், துறவால் வெற்றி அடைவதும் இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.30

ததா²பி ப³த மே தை³ஹ்யோ 
ஹ்யாத்மா சைவாத் மநா விபு:⁴|
அஸம் பந்ந இவா பா⁴தி 
ப்³ரஹ்ம வர்சஸ்ய ஸத்தம:|| 

  • ததா²பி - இவ்வாறு இருந்த போதிலும் 
  • ப்³ரஹ்ம வர்சஸ்ய -  பிரும்ம வர்ஸத்தை உடையோர்களுக்குள்
  • ஸத்தம: -  சிறந்ததாக இருந்த போதிலும் 
  • தை³ஹ்யோ -  ஸரீரத்தில் உள்ள  
  • மே ஆத்மா - எனது ஜீவாத்மாவானது 
  • விபு:⁴ ஹி - ஸுரூபத்தால் பரிபூர்ணமானதே ஆனாலும்   
  • ஆத்மநா -  ஸ்வரூபத்தால் 
  • அஸம் பந்ந இவ - பூரணமற்றது போல 
  • ப³த ஆபா⁴தி - குறை தோன்றுகிறது   

நான், பிரும்ம தேஜஸைப் பெற்று ஞானிகளில் சிறந்தோனாகவும், அனைத்தும் செய்யத் திறமை பெற்றிருப்பினும், எனது உள்ளம் நிறைவு பெறாதது போல் தோன்றுகிறது. உண்மைப் பரம்பொருளை அறியாது கை நழுவ விட்டவன் போலத் தோன்றுகிறதே! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.75

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.75

பஞ்ச ஸேநாக்³ ரகா³ந் ஹத்வா 
ஸப்த மந்த்ரி ஸுதா நபி|
ஸூ²ர மக்ஷம் ச நிஷ் பிஷ்ய 
க்³ரஹணம் ஸமுபா க³மத்|| 

  • பஞ்ச - ஐந்து 
  • ஸேநாக்³ ரகா³ந் - சேனாதிபதிகளையும்
  • ஸப்த மந்த்ரி - ஏழு மந்திரி 
  • ஸுதாந் அபி - புத்திரர்களையும் 
  • ஹத்வா - வதைத்து 
  • ஸூ²ரம் - சூரனான 
  • அக்ஷம் ச - அக்ஷனையும் 
  • நிஷ் பிஷ்ய - பொடியாக்கி 
  • க்³ரஹணம் - பிடிபடுவதை
  • ஸமுபா க³மத் - அடைந்தார் 

மேலும் அவர், சேனாதிபதிகள் ஐவரையும், மந்திரி குமாரர்கள் எழுவரையும் கொன்று, சூரனான அக்ஷனை நொறுக்கி,  இந்திரஜித்தின் கணையில் கட்டுண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 117 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 117 - நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா

ஆய்ச்சி அன்று* ஆழிப் பிரான் புறம் புல்கிய* 
வேய்த் தடம் தோளி சொல்* விட்டுசித்தன் மகிழ்ந்து* 
ஈத்த தமிழ் இவை* ஈரைந்தும் வல்லவர்* 
வாய்த்த நன்மக்களைப் பெற்று* மகிழ்வரே| (2)

  • வேய்த்த - மூங்கில் போன்ற
  • தடந் - பெரிய
  • தோளி - தோள்களை உடையவளான
  • ஆய்ச்சி - யசோதை பிராட்டி
  • அன்று - அக் காலத்திலே
  • ஆழிப் பிரான் - சக்கராயுதத்தை கையில் ஏந்திய ப்ரபுவான கண்ணன்
  • புறம் புல்கிய - தன் முதுகை வந்து கட்டிக் கொண்டதை பற்றி கூறிய
  • சொல் - சொன்ன பாசுரங்களை
  • விட்டு சித்தன் - பெரியாழ்வார்
  • மகிழ்ந்து - தாம் அநுபவித்து, ஸந்தோஷித்து
  • ஈந்த - உலகத்தார்க்கு உபகரித்த
  • தமிழ் இவை ஈர் ஐந்தும் - தமிழ்ப் பாசுரமாகிய இப் பத்துப் பாசுரங்களையும்
  • வல்லவர்- ஓத வல்லவர்கள்
  • வாய்த்த - மங்களாசாஸநத்தில் விருப்பம் பொருந்தி
  • நல் மக்களை - நல்ல புத்திரர்களையும், ஸத் சிஷ்யர்களையும்
  • பெற்று - அடைந்து
  • மகிழ்வர் – மகிழ்ச்சி பெறுவார்கள்

மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய யசோதை, சக்ராயுதபாணியான கண்ணன் அன்று புறம் புல்கியதை (பின்புறம் வந்து தன்னை கட்டிக்கொண்டு விளையாடியதைக் கூறியதை), பெரியாழ்வார் தாம் அநுபவித்து உலகத்தாருக்காக தந்த இப்பத்து தமிழ் பாசுரங்களை ஓதவல்லவர்கள் நல்ல மக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைவர்கள்.

அடிவரவு: வட்டு கிங்கிணி சுத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி - மெச்சூது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

035. திருதேவனார் தொகை (திருநாங்கூர்)
முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1248 - மாதவப் பெருமாள் இருக்குமிடம் இத்தலம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரை மேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார் தொகையே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1249 - வேதப் பொருளே எம்பெருமான்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
யாவரும் ஆய் யாவையும் ஆய்* எழில் வேதப் பொருள்களும் ஆய்*
மூவரும் ஆய் முதல் ஆய* மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
மா வரும் திண் படை மன்னை* வென்றி கொள்வார் மன்னு நாங்கை*
தேவரும் சென்று இறைஞ்சு பொழில்* திருத்தேவனார் தொகையே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1250 -  எல்லாப் பொருளுமாவான் எம்பெருமான்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வான் நாடும் மண் நாடும்* மற்று உள்ள பல் உயிரும்*
தான் ஆய எம் பெருமான்* தலைவன் அமர்ந்து உறையும் இடம்*
ஆனாத பெருஞ் செல்வத்து* அரு மறையோர் நாங்கை தன்னுள்*
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார் தொகையே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1251 - தேவர்கள் தொழுமிடம் திருத்தேவனார் தொகை
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழில் அமைந்த*
சந்த மலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*
எந்தை! எமக்கு அருள் என நின்று* அருளும் இடம் எழில் நாங்கை*
சுந்தர நல் பொழில் புடை சூழ்* திருத்தேவனார் தொகையே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1252 - உலகேழும் ண்டவன் உறைவிடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
அண்டமும் இவ் அலை கடலும்* அவனிகளும் குல வரையும்*
உண்ட பிரான் உறையும் இடம்* ஒளி மணி சந்து அகில் கனகம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திகழ் மண்ணித் தென் கரை மேல்*
திண் திறலார் பயில் நாங்கைத்* திருத்தேவனார் தொகையே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1253 - ஆலிலையில் பள்ளி கொண்டவன் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளி கொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல் நாங்கைத்* திருத்தேவனார் தொகையே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1254 - நரஸிங்கனின் இடமே திருத்தேவனார் தொகை 
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
ஓடாத வாளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கை தன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார் தொகையே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1255 - மைதிலியை மணம் புரிந்தவன் மகிழ்விடம் இது தான்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வார் ஆரும் இளங் கொங்கை* மைதிலியை மணம் புணர்வான்*
கார் ஆர் திண் சிலை இறுத்த* தனிக் காளை கருதும் இடம்*
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கை தன்னுள்*
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார் தொகையே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1256 - குவலயா பீடத்தைக் கொன்றவன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்தின்* மணம் கமழும் நாங்கை தன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார் தொகையே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1257 - வைகுந்தத்தில் தேவரோடு இருப்பர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார் தொகை மேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 84

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 29

ஸ்கந்தம் 03

ப்ரக்ருதியின் செயல் தத்வங்களான இருபத்து நான்கினையும் விளக்கினார் கபிலர். 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும்‌ பஞ்ச மஹாபூதங்கள். கந்தம்(மணம்), பொறி, புலன்கள்‌ பத்து. காது, தோல், கண், மூக்கு, நாக்கு ஆகிய ஐந்தும் அறிவுப்புலன்கள் (ஞானேந்திரியங்கள்). பேச்சு (வாக்கு), கை, கால், பிறப்புறுப்பு, கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு இவை ஐந்தும் செயற்புலன்கள். மனம் (உணர்தல்), புத்தி (தெரிந்து அறிதல்), அஹங்காரம் (தானெனும் எண்ணம்), சித்தம் (பகுத்தறிவு) இவை நான்கும் அந்தர்முகமான இந்திரியங்கள் (அந்தக்கரணங்கள்). அவற்றின்‌ செயல்கள் ஸங்கல்பம் (எண்ணுதல்), நிச்சயம் (தீர்மானம்), அபிமானம், சிந்தை ஆகியவை. இவ்வாறு ஸகுண ப்ரும்மத்தின் சரீர அமைப்பு இருபத்து நான்கு தத்வங்கள்‌ கொண்டது. இருபத்தைந்தாவது தத்வம் காலம் ஆகும். காலம் தனியாக இல்லாமல் புருஷனான பகவானின் ஸம்ஹார சக்தியாகக் கருதப்படுகிறது.


மாயையின் செயலுருவான உடலையே ஆன்மா என்று எண்ணி அகங்காரம்‌ கொண்டு 'செயல்புரிபவன் நானே' என்றெண்ணும் ஜீவனுக்கு காலத்தைக் கண்டு பயம் உண்டாகிறது. பகவான் ஒருவரே. தன் மாயா சக்தியால் அனைத்து ஜீவராசிகளின் ஜீவனாகவும், வெளியில் காலத்தைக் கணக்கிடும் காலனாகவும் விளங்குகிறார். அவர் எந்த மாறுதலையும் அடைவதில்லை. அவரே இருபத்தைந்தாவது தத்வமாகவும் கூறப்படுகிறார். ஜீவன்களின் கர்மவினைகளிகளின் பயன் முக்குணங்களின் கலப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்துகிறது. முதலில், பகவான் தன் சித்சக்தியை ஜீவராசிகளின் தோற்றத்திற்கு இடமான ப்ரக்ருதியில் விடுத்தான். அதிலிருந்து ஒளிமயமான மஹத் தத்வம் தோன்றியது.

மறைதல், மாறுதல் முதலியவை அற்றதும் இந்த ப்ரபஞ்சத்தின் முளையானதுமான மஹத் தத்வம் தன்னுள் அடங்கிய ப்ரபஞ்சத்தை வெளிப்படுத்த தனது ஸ்வரூபத்தை மறைத்து நிற்கும் இருளைத் தன் ஒளியினால் அகற்றியது. மஹத் தத்வம் ஸத்வ மயமானது. தூய்மையானது. பகவானை அறியும் சாதனமாவது. ராக த்வேஷமற்றது. பகவானின் நான்கு வியூகங்களில் ஒன்றான வாசுதேவனாக அறியப்படுகிறது.

சித்தம்‌ என்றழைக்கப்படுவதே மஹத் தத்வம் ஆகும். சித்தத்தின் அதிஷ்டான தேவதை க்ஷேத்ரக்ஞன். உபாசனை தெய்வம் வாசுதேவன். அஹங்காரத்தின் அதிஷ்டான தேவதை ருத்ரன். உபாசனா தேவதை ஸங்கர்ஷணன். புத்தியின் அதிஷ்டான தேவதை ப்ரும்மா. உபாசனா தேவதை ப்ரத்யும்னன். மனத்தின் அதிஷ்டான தேவதை சந்திரன். உபாசனா தெய்வம் அனிருத்தன். தண்ணீர் மண்ணின் சம்பந்தமின்றி இருக்கும்போது, அதாவது நதி, குளம், ஏரி என்று உருவம் ஏற்காதபோது அதன் தன்மைகளான அலை, நுரை, சத்தம் ஆகியவற்றை விட்டு அமைதியாய் தூய்மையாய் இருக்கிறது. அது போல் சித்தத்தின் இயல்பு தூய்மை மற்றும்‌ அமைதி ஆகும்.‌ மஹத் தத்வத்தின் அசைவினாலேயே முக்குணங்களும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும், பொறி -புலன்களும், மனமும் தோன்றின. இந்த அஹங்கார தத்வமே ஸங்கர்ஷணன் ஆகும். ஒவ்வொரு தத்துவத்தின் தன்மையையும், அவற்றின் உற்பத்தியையும் மிக விரிவாக விளக்கினார் கபிலர்.

கதைகளை மட்டும் படித்துக் கொண்டு போனால் சுவாரசியம்‌ மிகும் தான். ஆனால், 18000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீ மத் பாகவதத்தின் மிகச் சிறு பகுதியே பகவானின் உண்மை ஸ்வரூபத்தின் இந்த தத்வங்கள். இவற்றை ஒருமுறையாவது படிக்கும் வாய்ப்பை நழுவ விடவேண்டாம் என்றே எழுதப்படுகிறது. இருப்பினும்‌ இதுவும்‌ மிகவும் சுருங்கச் சொல்லப்பட்டதேயாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்