||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.31
கிம் வா பா⁴க³வதா த⁴ர்மா
ந ப்ராயேண நிரூபிதா:|
ப்ரியா: பரம ஹம்ஸா நாம்
த ஏவஹ் யச்யுத ப்ரியா:||
- பா⁴க³வதா - பகவத் ஸம்மந்தமான
- த⁴ர்மா - தருமங்கள் யாவும்
- ப்ராயேண - அநேகமாக
- ந நிரூபிதாஹ - நிரூபிக்கப்படவில்லை
- கிம் வா - போலும்
- தே ஏவ ஹி - அந்த பகவத் ஸம்மந்தமான தருமங்கள் அல்லவா
- பரம ஹம்ஸா நாம் - பரம ஹம்ஸர்களுக்கு
- ப்ரியாஃ - ப்ரியமானவை
- அச்யுத ப்ரியாஹ - ஸ்ரீ பகவானுக்கும் ப்ரியமானவை
நான், ஒருக்கால் பகவானைப் பற்றிய பாகவத தர்மங்களைச் சரிவர விளக்கவில்லையோ! அந்த பகவானைப் பற்றிய தர்மங்கள் அல்லவா, பரம பக்தர்களுக்கு உகந்தவை. அவர்கள் உகப்பதைத் தானே பகவானும் உகப்பன்?' அதாவது, பக்தர்கள் விருப்பமேயன்றோ, பகவானது விருப்பம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment