||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 63
ஸு²பா⁴ங்க³ஸ்² ஸா²ந்தித³ஸ் ஸ்ரஷ்டா
குமுத³: குவலேஸ²ய:|
கோ³ஹிதோ கோ³பதிர் கோ³ப்தா
வ்ருஷ பா⁴க்ஷோ வ்ருஷ ப்ரிய:||
- 593. ஸு²பா⁴ங்க³ஸ்² - யோகத்தின் எட்டு அங்கங்களையும் நிறைவேற்றித் தரும் மங்களகரமானவர். வசீகரமும் மயக்கும் அழகிய உறுப்புகளை உடையவர். மயக்குபவர்.
- 594. ஸா²ந்தித³ஸ் - முழு சாந்தியைத் தருபவர். அமைதியை வழங்குபவர்.
- 595. ஸ்ரஷ்டா - படைப்பவர்.
- 596. குமுத³ஹ் - மகிழ்பவர். பூமியில் தனது பல்வேறு அவதாரங்களின் போது தனது அனைத்து லீலாக்களை காட்டுபவர்.
- 597. குவலே ஸ²யஹ - ஜீவர்களை அடக்கி ஆள்பவர். பூமியைச் சூழ்ந்துள்ள நீர்நிலைகளில் இருப்பவர்.
- 598. கோ³ஹிதோ - இதத்தை உண்டு பண்ணுபவர். கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு பசுக்களைப் பாதுகாத்தார்.
- 599. கோ³பதிர் - போக பூமிக்குத் தலைவர்.
- 600. கோ³ப்தா - காப்பாற்றுபவர்.
ஆறாம் நூறு திரு நாமங்கள் நிறைவு.
- 601. வ்ருஷ பா⁴க்ஷோ - தரும சக்கரத்துக்கு அச்சாக இருப்பவர். தர்மத்தின்படி செயலின் பலனைப் பொழிகிறார்.
- 602. வ்ருஷ ப்ரியஹ - தருமத்தில் அன்புள்ளவர். நல்லொழுக்கம் உள்ளவர்களின் ப்ரியமானவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment