||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
020. திரு தஞ்சைமாமணி கோவில் (தஞ்சாவூர்)
இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 5 பாசுரங்கள்
1. பூதத்தாழ்வார் - 1 பாசுரம்
இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் – 2251 - இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
----------------------
2. நம்மாழ்வார் - 1 பாசுரம்
திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 3255 - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
----------------------
3. திருமங்கையாழ்வார் - 3 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 953 -முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1090 - இரண்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 1576 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
----------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
ஓதக்கேள் நெஞ்சே உனக்கும் இது நன்று எனக்கும்*
மேதக்க நன்மை இதின் வேறு இல்லை போதப்*
பெருந்தஞ்சை மா மணியைப் பேணி வடிவம்*
பொருந்து அஞ்சை மா மணியைப் போற்று*
- நெஞ்சே – மனமே!
- ஓத – நான் சொல்வதை
- கேள் – நீ கேட்பாயாக
- கேட்டால் இது உனக்கும் நன்று – நான் சொல்லுகின்ற இவ்விஷயம் உனக்கும் நன்மையை உண்டாக்கும்
- எனக்கும் மேதக்க நன்மை இனி வேறு இல்லை – எனக்கும் மிக்க நன்மையை உண்டாக்குவது இதனினும் வேறொன்று இல்லையாம். இவ்வாறு நம்மிருவர்க்கும் ஒருங்கே நன்மை பயக்கக்கூடிய உபாயம் யாதெனில்
- பெருந் தஞ்சை மா மணியை போத பேணி – பெரிய திருத்தஞ்சையென்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளிய
- சிறந்த மாணிக்கம் போன்ற கடவுளை நன்றாக விரும்பித் துதித்து
- வடிவம் பொருந்து – அப்பெருமானது திருமேனியில் பொருந்திய
- அஞ்சை – பஞ்சாயுதங்களையும்
- மா – லஷ்மியையும்
- மணியை – கௌஸ்துபரத்நத்தையும்
- போற்று – வாழ்த்துவாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment