About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 7 January 2024

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.30 

தே³ஹீ நித்யம வத்⁴யோ யம் 
தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
தஸ்மாத் ஸர்வாணி பூ⁴தாநி 
ந த்வம் ஸோ²சிது மர்ஹஸி||

  • தே³ஹீ - பௌதிக உடலின் உரிமையாளன் 
  • நித்யம் - நித்தியமாக 
  • அவத்⁴ய - கொல்லப்பட முடியாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • தே³ஹே - உடலில் 
  • ஸர்வஸ்ய - எல்லோரது 
  • பா⁴ரத - பரத குலத்தில் உதித்தவனே
  • தஸ்மாத் - எனவே 
  • ஸர்வாணி - எல்லா 
  • பூ⁴தாநி - பிறந்த உயிர்வாழிகள் 
  • ந - ஒருபோதும் இல்லை 
  • த்வம் - நீ 
  • ஸோ²சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

பரத குலத்தில் உதித்தவனே! இந்த ஆத்மா, எல்லா உடலிலும் நித்தியமாக இருப்பதால், கொல்லப்பட முடியாதவன். எனவே, பிறந்த எல்லா உயிர் வாழிகளுக்காகவும் ஒருபோதும் நீ கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு கூறி அர்ஜுநனை போர் புரிய வைக்கிறான் கண்ணன். மேலும் இப்போர் புரியாமல் போனால் என்ன நடக்கும் என்பதையும் விளக்குகிறான் கண்ணன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment