||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 77 - மணிவண்ணன் ஆழியங்கையன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பன்மணி முத்து* இன் பவளம் பதித்தன்ன*
என் மணிவண்ணன்* இலங்கு பொற்றோட்டின் மேல்*
நின்மணி வாய் முத்திலங்க* நின் அம்மை தன்*
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
ஆழியங் கையனே சப்பாணி|
- என் - என்னுடைய
- மணி வண்ணன் - நீல மணி போன்ற நிறமுடையவனே!
- பல் - பலவகைப் பட்ட
- மணி - சதகங்களையும்
- முத்து - முத்துக்களையும்
- இன் பவளம் - இனிய பவழத்தையும்
- பதித்த - அழுத்தி பதித்துச் செய்யப் பட்டதும்
- அன்ன - அப்படிப்பட்ட அழகியதுமாக
- இலங்கு - விளங்குகின்ற
- பொன் தோட்டின் மேல் - பொன்னாற் செய்த தோடென்னும் காதணியின் அழகையும் மிஞ்சும் படியாக இருக்கும்
- நின் மணி வாய் முத்து - உன்னுடைய அழகிய திருவாயிலே முத்துப் போன்ற பற்கள்
- இலங்க - தெரிய சிரித்துக் கொண்டு
- நின் அம்மை தன் - உன் தாய் யசோதையின்
- அம்மணி மேல் - மடியிலிருந்து கொண்டு
- கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
- ஆழி - திருவாழி மோதிரத்தை
- அம் கையனே - அழகிய கையிலுடையவனே!
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
விதவிதமான மணிகளும், முத்துக்களும், பவளங்களும் பொருத்திச் செய்யப்பட்ட நீ அணிந்திருக்கும் பொன் காது அணிகளின் அழகையும் மிஞ்சும் படியாக இருக்கும் முத்துக்கள் போல் பிரகாசிக்கும் உன் பற்கள், உன் திருப்பவள வாய்ச் சிரிப்பின் போது, தெரியும் படி உன் தாயின் இடுப்பில் அமர்ந்து கைகளைக் கொட்டு, என் நீல மணி போன்ற நிறம் உடையவனே! திருச் சக்கரத்தை அழகிய கையில் ஏந்தியவனே! அத்திருக் கைகளைக் கொட்டி விளையாட வேண்டும்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment