||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.32
அத: பரம் யத³வ் யக்தம்
அவ்யூட⁴ கு³ண வ்யூஹிதம்|
அத்³ருஷ் டாஸ்² ருத வஸ்துத் வாத்
ஸ ஜீவோ யத் புநர் ப⁴வ:||
- அதஃ பரம் - இந்த ஸ்தூல ரூபத்தை காட்டிலும் வேறானது
- அத்³ருஷ் டாஸ்² ருத - பார்க்கப்படாததும் கேட்கப்படாததும் வஸ்து
- வஸ்துத் வாத்து - ஸத்தா ஸ்வரூபம் ஆனதும்
- அவ்யூட⁴ கு³ண வ்யூஹிதம் - கர சரணாகதிகளில் இல்லாததும் ப்ருதிவியாதிகளால் செய்யப்பட்டதும்
- அவ் யக்தம் - அதி ஸூக்ஷமமாகவும்
- யத்³ - யாதொரு ஸூக்ஷ்ம ஸரீரம் உண்டோ
- யத் - யாதொரு ஸூக்ஷ்ம ஸரீரத்தில் இருந்து
- புநர் ப⁴வஹ - மறுபடியும் உற்பத்தி உண்டாகிறதோ
- ஸ ஜீவோ - அதுவே ஜீவோ பாதியாக கல்பிக்கப்படுகிறது
வெளியில் தெரியக்கூடிய ஸ்தூல ஸரீரத்திலிருந்து வேறுபட்டதும், கை, கால் முதலிய அவயவங்களற்றதும், ஆகவே, பார்கவோ கேட்கவோ முடியாததும், மிகவும் ஸூக்ஷ்மமாகவும் உள்ள இந்த லிங்க சரீரமே (மாயையோடு கூடியதுமே) ஜீவன் என்று அழைக்கப் படுகிறது. இதுவே பிறப்பிறப்பிற்குக் காரணமாகிறது. அதாவது பிறவி எடுக்கிறது. இந்த (ஸூக்ஷ்மமான) லிங்க ஸரீரமும் முன் கூறியது போல, பகவான் மேல் ஏற்றிக் கூறப்படுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment