||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 58
மஹா வராஹோ கோ³விந்த³:
ஸுஷேண: கநகாங் க³தீ³|
கு³ஹ்யோ க³பீ⁴ரோ க³ஹநோ
கு³ப்தஸ்² சக்ர க³தா³த⁴ர:||
- 542. மஹா வராஹோ - பகவான் மகா வராஹா என்ற பெரும் பன்றியாக அவதரித்து பூமியைக் காப்பாற்றினார்.
- 543. கோ³விந்த³ஸ் - தேவர்களால் போற்றப்படுபவர். கடலின் ஆழத்திலிருந்து பூமியை தோண்டி எடுத்தவர். பசுக்களைப் பாதுகாப்பவர். வேதங்களை வழங்குபவர். பூமியை மீட்டவர். உபநிடதங்கள் போன்ற வேத மந்திரங்களால் அறியப்பட்டவர். நகரும் அனைத்து விஷயங்களுக்கும் பொறுப்பானவர். உலகைக் காக்கும் கோவிந்தன். பூமியை உடையவர்.
- 544. ஸுஷேணஹ் - சதுரங்க பலமுடையவர். புகழ்பெற்ற படையைக் கொண்டிருக்கிறார். அவருடைய படைத் தளபதியாக விஷ்வக்சேனன் செயல்படுகிறார்.
- 545. கநகாங் க³தீ³ - அவர் தங்கக் கவசங்கள் மற்றும் அவரது பிரகாசத்தை வெளிப்படுத்தும் மற்ற திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளார்.
- 546. கு³ஹ்யோ - மறைக்கப்பட்டவர். அவர் நம் இதயத்தில் மறைந்திருக்கிறார். அறிவு மற்றும் சிந்தனை மூலம் மட்டுமே உணர முடியும்.
- 547. க³பீ⁴ரோ - கம்பீரமான வடிவமுடையவர். பகவான் ஆழமானவர். வார்த்தைகளாலும் மனதாலும் அளவிட முடியாதவர். அவரது கம்பீரமான ஆளுமையை தோராயமாக மட்டுமே குறிப்பிட முடியும்.
- 548. க³ஹநோ - அறிய முடியாத ஆழமானவர். அவரை அடைவது அல்லது அவரை அணுகுவது மிகவும் கடினம். ஊடுருவ முடியாதவர். அவர் விழிப்பு, உறக்கம் மற்றும் கனவு நிலை ஆகிய மூன்று நிலைகளிலும் சாட்சியாக இருக்கிறார்.
- 549. கு³ப்தஸ்² - விசுவாமித்திரர். அநந்தன். கருடன் போன்றவர்களால் பாதுகாக்கப்பட்டவர். மறைந்திருப்பவர்.
- 550. சக்ர க³தா³த⁴ரஹ - உலகப் பாதுகாப்பிற்காக சக்ரம். கதை முதலான பல திவ்ய ஆயுதங்களை உடையவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment