||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
017. திருக்கண்ணபுரம்
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் – நாகப்பட்டினம்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
5 ஆழ்வார்கள் - 129 பாசுரங்கள்
1. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 3656 - 3666 - ஒண்பதாம் பத்து - பத்தாம் திருவாய்மொழி
-----------
2. குலசேகராழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 719 - 729 - எட்டாம் திருமொழி
-----------
3. பெரியாழ்வார் - 1 பாசுரம்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 71 - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
-----------
4. ஸ்ரீ ஆண்டாள் - 1 பாசுரம்
1. நாச்சியார் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 535 - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
-----------
5. திருமங்கையாழ்வார் - 105 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) – (100 பாசுரங்கள்)
- திவ்ய ப்ரபந்தம் - 1648 - 1657 - எட்டாம் பத்து - முதலாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1658 - 1667 - எட்டாம் பத்து - இரண்டாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1668 - 1677 - எட்டாம் பத்து - மூன்றாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1678 - 1687 - எட்டாம் பத்து - நான்காம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1688 - 1697 - எட்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1698 - 1707 - எட்டாம் பத்து - ஆறாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1708 - 1717 - எட்டாம் பத்து - ஏழாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1718 - 1727 - எட்டாம் பத்து - எட்டாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1728 - 1737 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி
- திவ்ய ப்ரபந்தம் - 1738 - 1747 - எட்டாம் பத்து - பத்தாம் திருமொழி
2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2067 - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (16)
- திவ்ய ப்ரபந்தம் - 2078 - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (27)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (35)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 2759 - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (47)
- திவ்ய ப்ரபந்தம் - 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
-----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
பேறு தரினும் பிறப்பு இறப்பு நோய் மூப்பு*
வேறு தரினும் விடேன் கண்டாய் ஏறு நீர்*
வண்ண புரத்தாய் என் மனம் புகுந்தாய் வைகுந்தா*
கண்ண புரத்தாய் உன் கழல்*
- ஏறு நீர் வண்ணம் புரத்தாய் – அலைகள் கரை மேல் புரளப் பெற்ற நீரை உடைய கடல் போன்ற கருநிறத்தைக் கொண்ட திருமேனியை உடையவனே!
- என் மனம் புகுந்தாய் – எனது மனத்தில் குடி புகுந்துள்ளவனே!
- வைகுந்தா – ஸ்ரீ வைகுண்டத்தில் எப்போதும் வாழ்பவனே!
- கண்ணபுரத்தாய் – திருக்கண்ணபுரம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
- நீ அடியேனுக்கு பேறு தரினும் – பரம புருஷார்த்தமாகிய மோக்ஷத்தைக் கொடுத்தாலும்
- வேறு – அதற்கு மாறாக
- பிறப்பு இறப்பு நோய் மூப்பு தரினும் – ஜநநத்தையும் மரணத்தையும் வியாதியையும் கிழத்தனத்தையும் தந்தாலும்
- இந்த லீலா விபூதியிலேயே அலைய வைத்தாலும்
- உன் கழல் – உனது திருவடிகளை
- விடேன் – உபாயமாகக் கொண்டிருப்பேனே அன்றி ஒரு போதும் விட்டு நீங்கேன்
- கண்டாய் – முன்னிலையசை, தேற்றமுமாம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment