||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கம்சனின் வதம்|
வீரர்களின் வீழ்ச்சியை கண்ட கம்சனால் இதை கண்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கிருஷ்ணனின் வெற்றிக்காக கொட்டப்படும் முரசின் ஒலியை கம்சனால் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை. அவருடைய சேவகர்கள் வீழ்த்தப்பட்டத்தை நினைத்து கோபமுற்றான். அந்த முரசை நிறுத்த சொல்லி கட்டளையிட்டான். கம்சன் விரக்தியில் சேவகர்களை நோக்கி, "இந்த இருவரையும் மதுராவை விட்டு வெளியே துரத்துங்கள், நந்தரை இந்த துரோகத்தை செய்ததற்காக கைது செய்யுங்கள், உடன் அந்த துரோகி வசுதேவரையும் அழித்து விடுங்கள், மனசாட்சியே இல்லாத எனது தந்தையையும் அழியுங்கள்" என்று கட்டளையிட்டான்.
கிருஷ்ணனால் கம்சனின் இந்த வார்த்தைகளை கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்க முடியவில்லை, கிருஷ்ணனுக்கு கோபம் அதிகமானது. கிருஷ்ணன் களத்தில் இருந்து தாவி குதித்து, கம்சனின் அரியாசனத்தின் பக்கத்தில் சென்று நின்றார். கிருஷ்ணனின் வேகத்தை பார்த்து, கம்சன் அவன் வாளினை எடுத்து அவனை காத்துகொள்ள முயன்றான், கிருஷ்ணன் கம்சனின் கிரீடத்தை கீழே தள்ளி, அவன் தலைமுடியை இழுத்து பிடித்தான். அவனது சிம்மாசனத்திலிருந்து மைதானத்தில் கம்சனை தள்ளிவிட்டான். கீழே விழுந்த வேகத்தில் கம்சன் உயிர் மாண்டான். ஒரு சிங்கம் யானையை வேட்டையாடுவது போல கம்சனின் உடலை தூக்கி தூரம் அடித்தார். சுற்றி இருந்த அனைவரும் இதனை பார்த்து பயந்தனர். ஐயோ என்று பதறினர்.
கம்சனுக்கு எட்டு சகோதரர்கள் உள்ளனர், முதல் சகோதரன் கங்கன் ஆவான், கம்சன் கொல்லப்பட்டதை பார்த்த எல்லா அண்ணன்மார்களும் களத்தில் இறங்கினர், அனைவரும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை கொல்ல முயன்றனர். பலராமன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இவர்களை தாக்க ஆரம்பித்தான், யானையின் தந்தத்தை எடுத்து, ஒருவர் பின் ஒருவராக எட்டு பேரையும், ஒரு சிங்கம் மான் கூட்டத்தை வேட்டையாடுவது போல துரத்தி துரத்தி கொன்றான். கம்சன் மனைவியும், அவன் உடன் பிறந்தோரின் மனைவிகளும் இதனை பார்த்துக் கதறி அழுதுகொண்டே இருந்தனர். கிருஷ்ணன் அனைவரின் மனைவிகளிடம் ஆறுதல் கூறினார், பிறகு அவர்களுடைய இறுதி சடங்கிற்கான ஏற்பாடு நடந்தது.
பிறகு கிருஷ்ணனும் பலராமனும் அவர்களது தாய் தந்தையையும், தாத்தாவையும் சிறையில் இருந்து விடுவித்தனர், தாய் தந்தை கால்களில் விழுந்து கிருஷ்ணனும் பலராமனும் ஆசிர்வாதம் பெற்றனர். தாத்தா உக்ரசேனாவை மீண்டும் அரசராக்கினர். இந்த விஷயத்தை கேட்டு யசோதையும் ரோஹினியும் மதுராவிற்கு விரைந்தனர். நந்தரும், யசோதையும், ரோஹினியும் மதுராவில் சில நாட்கள் சந்தோஷமாக கழித்துவிட்டு, பிறகு கிருஷ்ணனையும் பலராமனையும் அங்கயே இருக்க வைத்து விட்டு, வசுதேவரும் யசோதையும் பிருந்தாவனத்திற்கு திரும்பினர்.
ஆனால் கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் இவர்களை வளர்த்தவர்களை பிரிய மனமில்லை. அதனால் அவர்களுடன் பிருந்தாவனத்திற்கு திரும்பி வந்தனர். இதனை கண்ட பிருந்தாவன மக்கள் மனதில் சந்தோஷம் பொங்கியது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment