About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 19 October 2023

திவ்ய ப்ரபந்தம் - 46 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 46 - இந்திரன் கொடுத்த கிண்கிணி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

என் தம்பிரானார்* 
எழிற் திரு மார்வர்க்குச்*
சந்தம் அழகிய* 
தாமரைத் தாளர்க்கு*
இந்திரன் தானும்* 
எழிலுடைக் கிண்கிணி* 
தந்துவனாய் நின்றான் தாலேலோ* 
தாமரைக் கண்ணனே! தாலேலோ|

  • எம் தம்பிரானார் - எமக்கு ஸ்வாமியா
  • எழில் - அழகிய
  • திருமார்வார்க்கு - திருமார்பை டைய
  • சந்தம் அழகிய - அழகிய நிறத்தை டைய
  • தாமரை - தாமரை போன்ற 
  • தாளர்க்கு - திருவடிகளை டைய எம்பிரானே!
  • இந்திரன் தானும் - தேவேந்திரனும் தன் பங்கிற்கு
  • எழில் உடை - அழகை டைய
  • கிண்கிணி - கிணி கிணியை 
  • தந்து - கொண்டு வந்து ஸமர்ப்பித்து
  • உவனாய் நின்றான் - உன்னருகில் பணிவன்புடன் நின்றான்
  • தாலேலோ - கண்ணுறங்கு
  • தாமரைக் கண்ணனே! - தாமரை போன்ற கண்ணழகனே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

தாமரையையொத்த திருவடிகளையுடையவனே, அழகிய திருமார்பை உடையவனே, எம்முடைய ஸ்வாமியே, உனக்கு தேவேந்திரன் அழகிய கிலுகிலுப்பையை (கால்-சதங்கை என்றும் பொருள் உண்டு) கொடுத்து விட்டு அங்கு தான் நிற்கிறான், கண்ணுறங்கு, தாமரைக் கண்ணனே கண்ணுறங்கு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment