||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 11
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
வாமே பூ⁴மி ஸுதா புரஸ்²ச ஹநுமான்
பஸ்²சாத் ஸுமித்ரா ஸுத꞉
ஸ²த்ருக்⁴நோ ப⁴ரதஸ்² ச பார்ஸ்²வ த³ளயோ:
வாய் வாதி³ கோணேஷு ச| .
ஸுக்³ரீவஸ்² ச விபீ⁴ஷணஸ்² ச யுவராட்
தாரா ஸுதோ ஜாம்ப³வாந்
மத்⁴யே நீல ஸரோஜ கோமள ருசிம்
ராமம் ப⁴ஜே ஸ்²யாமளம்||
- வாமே - இடது பக்கத்தில்
- பூ⁴மி ஸுதா - சீதையுடனும்
- புரஸ்²ச - முன்னால்
- ஹநுமான் - ஹநுமனுடனும்
- பஸ்²சாத் - பின்னால்
- ஸுமித்ரா ஸுதஸ் - லக்ஷ்மணனுடனும்
- ஸ²த்ருக்⁴நோ ப⁴ரதஸ்² ச - சத்ருக்னன் பரதன் இவர்கள்
- பார்ஸ்²வ த³ளயோர் - இரு பக்கத்திலும் இருக்க
- வாய் வாதி³ கோணேஷு ச - அஷ்ட திக்குகளிலும்
- ஸுக்³ரீவஸ்² ச விபீ⁴ஷணஸ்² ச யுவராட் தாரா ஸுதோ ஜாம்ப³வாந் - சுக்ரீவன், விபீஷணன், கிஷ்கிந்தை யுவராஜனான தாரையின் மைந்தன் அங்கதன், ஜாம்பவாந்
- மத்⁴யே - இவர்கள் மத்தியில்
- நீல ஸரோஜ கோமள ருசிம் - நீல நிறத்து தாமரைபோல அழகிய உருவத்துடன் விளங்கும்
- ஸ்²யாமளம் - சியாமளனான
- ராமம் - ராமனை
- ப⁴ஜே - துதிக்கிறேன்
இடது பக்கத்தில் சீதையுடனும் முன்னால் ஹநுமனுடனும் பின்னால் லக்ஷ்மணனுடனும் சத்ருக்னன் பரதன் இவர்கள் இரு பக்கத்திலும் இருக்க அஷ்ட திக்குகளிலும் சுக்ரீவன், விபீஷணன், கிஷ்கிந்தை யுவராஜனான தாரையின் மைந்தன் அங்கதன், ஜாம்பவாந் இவர்கள் மத்தியில் நீல நிறத்து தாமரைபோல அழகிய உருவத்துடன் விளங்கும் சியாமளனான ராமனை துதிக்கிறேன்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment