||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கோபியர்களின் மன வருத்தம்|
கிருஷ்ணன், பலராமர் மற்றும் நந்தர் மதுரா செல்லும் விஷயத்தை அறிந்த கோபியருக்கு ஒன்றும் புரியவில்லை, கிருஷ்ணனை நினைத்து அழ ஆரம்பித்தனர், அவர்கள் மனதில் துன்பம் பெருகியது, கிருஷ்ணனை விட்டு பிரியப் போவதை நினைத்து புலம்பினர், எல்லோரும் ஒன்று சேர்ந்து, கண்களில் கண்ணிருடன், "ஹே பகவானே, எங்கள் மீது கருணையே இல்லையா? எங்களுக்கு கிருஷ்ணனின் அழகிய கண்களை காட்டியது நீதான், அவனது குழி விழும் கண்ணங்களையும், கூர்மையான மூக்கினையும், அழகு நிரம்பிய முகத்தையும் காட்டியது நீயே, ஆனால் இப்பொழுது அதை எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள நினைக்கிறாயே, இது நியாயமா? தர்மமா?" என்று புலம்பினர்.
கிருஷ்ணன் கிளம்பும் போது அனைவரும் அவனை தடுக்க நினைத்தனர், அவனது வீட்டுக்கு சென்று பார்த்தனர். கிருஷ்ணன் வீட்டில் இருந்து ஒரு அந்நியன் வெளியே வந்தார், அவர் அழகிய உடை, அலங்காரத்துடன் இருந்தார், நேராக சென்று தேரில் ஏறினார். அவரை கிருஷ்ணன் மற்றும் பலராமன் பின்தொடர்ந்து சென்று தேரில் அமர்ந்தனர். அனைவரும் பயணத்திற்கு தயாராக இருந்தனர். யசோதையும் ரோஹினியும் அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு அவர்கள் முகத்தை கைகளால் மூடி இருந்தனர், அவர்கள் இருவரும் இரவு முழுவதும் அழுது அழுது இவர்கள் செல்லுகையில் கண்ணீர் கூட வரவில்லை. முதன் முறையாக கிருஷ்ணனும் பலராமனும் கோபத்துடன் இருப்பதாய் கோபியர் பார்த்தார்கள். மற்றொரு தேரில் நந்தர் சில கோபியரையும் அழைத்து கொண்டு, தயிர், வெண்ணை, பால் மற்றும் சில பரிசு பொருட்களை ஏற்றினார். கோபியர்களின் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. பேச முடியவில்லை, கிருஷ்ணன் எங்கு செல்கிறான் என்று கேட்க முடியவில்லை. அவன் எங்கே செல்கிறான் என்று அவர்களுக்கு முன்பே தெரியும்.
கிருஷ்ணன் அவர்களை திரும்பி பார்த்து, ஒரு சின்ன புன்னகையை தந்தான். அவர்கள் தேற்ற முடியாத நிலையில் இருப்பதாய் கிருஷ்ணன் உணர்ந்தான். கிருஷ்ணன் தேரில் இருந்து இறங்கி, அவர்கள் அருகில் வந்து, அவர்களை பார்த்து நான் சீக்கிரம் வந்து விடுவேன், யாரும் கவலை பட வேண்டாம், நான் இப்பொது செல்லவில்லை என்றால் பிருந்தாவனமே அடியோடு அழிந்து விடும் என்று கோபியரிடம் கூறினான்.
ஒருத்தி மட்டும் கிருஷ்ணனை பார்த்து "கம்சன் பிருந்தாவனத்தை அழித்து விட்டால், நாங்களும் உன்னோடு இறந்து விடுவோம், நீ இல்லாத இடத்தில் நங்கள் வாழ மாட்டோம். உன்னை பார்த்துக் கொண்டு, உன்னுடைய நாமத்தை ஜபித்து கொண்டே நாங்கள் உயிரை விட்டு விடுவோம். இந்த பிருந்தாவனத்தை விட்டுச் சென்று விடாதே கிருஷ்ணா" என்று கதறினாள். கிருஷ்ணன் சமாதனம் பேசி விட்டு, சிக்கிரம் வருவதாக வாக்குறுதி கொடுத்து, அங்கு இருக்கும் பசுக்களிடம் சென்று தடவி கொடுத்தான். பசுக்களும் அழுது கொண்டு இருந்தன, அதன் கண்ணீரை துடைத்து விட்டான் கிருஷ்ணன். அவை அவன் மீது உள்ள பாசத்தினை வெளிபடுத்தின. பசுக்களை விட்டு பிரிந்து வர மனம் இல்லாமல் வந்தான். கோபியர்கள் சிலை போல அப்படியே நின்று கொண்டு இருந்தார்கள், அவர்கள் தேரினை உற்று நோக்கிக் கொண்டே இருந்தார்கள், கண் முன்னிருந்து மறையும் வரை பார்வை நகரவில்லை. கிருஷ்ணன் கண்டிப்பாக விரைவில் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் மனதை தேற்றிக் கொண்டனர்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment