||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 13
ருத்³ரோ ப³ஹுஸி²ரா ப³ப்⁴ருர்
விஸ்²வ யோநி: ஸு²சிஸ்²ரவா:|
அம்ருத: ஸா²ஸ்²வத: ஸ்தா²ணுர்
வரா ரோஹோ மஹாதபா:||
- 115. ருத்³ரோ - பக்தர்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பவர். பக்தர்களுக்கு நல்லதை வழங்குபவர். துன்பத்தை அழிப்பவர்.
- 116. ப³ஹுஸி²ரா - பல தலைகள் கொண்டவர்.
- 117. ப³ப்⁴ருர் - தாங்கி நிற்பவர்.
- 118. விஸ்²வ யோநிஸ்² - எல்லா உலகத்தவருடன் உறவு கொண்டவர்.
- 119. ஸு²சிஸ்²ரவாஹ - தூய சொற்களையே கேட்பவர். தெய்வீக காதுகளை உடையவர்.
- 120. அம்ருதஸ்² - ஆரா அமுதன். பக்தர்களுக்குத் திருப்தி அளிக்காத அமிர்தமாவார்.
- 121. ஸா²ஸ்²வதஸ் ஸ்தா²ணுர் - என்றும் நிலைத்து நிற்பவர். பக்தர்களை ஆசீர்வதிப்பதில் உறுதியாக இருப்பவர்.
- 122. வரா ரோஹோ - அடையத் தக்க மேலானவர் பரமபரநாதன். சிறந்த ஏற்றம் உடையவர்.
- 123. மஹாதபாஹ - எல்லையில்லாத ஞானமுடையவர். ஞானமூர்த்தி. சிறந்த அறிவை உடையவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment