||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
007. திருக்கண்டியூர்
த்ரிமூர்த்தி க்ஷேத்ரம் – தஞ்சாவூர்
ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்
1. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
1. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2050 - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
---------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
பேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக வாய்*
கேசவனைக் காண்க விழி கேட்க செவி ஈசனார்*
உண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்*
கண்டியூர் கூப்புக என்கை*
- வாய் - எனது வாயானது
- பேச வரின் - பேசத் தொடங்கினால்
- தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக - அழகிய ஸ்ரீ ரங்கநாதனது திருநாமங்களை எல்லாம் பேசக் கடவது
- விழி - எனது கண்கள்
- கேசவனை காண்க - கேசவன் என்னும் திருநாமத்தை உடைய எம்பெருமானைத் தரிசிக்கக் கடவன
- செவி - எனது காதுகள்
- கேட்க - அவனது புகழ்களையே கேட்கக் கடவன
- என் கை - எனது கைகள்
- ஈசனார் - சிவபெருமானை
- ஊர் தோறும் உழன்று உண்டி இரவாமல் - ஊர்கள் தோறும் அலைந்து சென்று உணவை யாசிக்க வொட்டாமல்
- தவிர்த்தான் - அவனது சாபத்தை நீக்கி அருளியவனுடைய
- கண்டியூர் - திருக்கண்டியூர் என்னும் ஸ்தலத்தை நோக்கி
- கூப்புக - குவித்து அஞ்சலி செய்யக் கடவன
---------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 2050 - திருக்கோயில் சேர்க! உய்யலாம்
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
பிண்டியார் மண்டை ஏந்திப்* பிறர் மனை திரி தந்து உண்ணும்*
உண்டியான் சாபம் தீர்த்த* ஒருவன் ஊர்*
உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம்*
கச்சி பேர் மல்லை என்று மண்டினார்*
உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல் ஆமே? (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment