||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.1
வ்யாஸ உவாச
இதி ப்³ருவாணம் ஸம்ஸ் தூய
முநீநாம் தீ³ர்க⁴ ஸத்ரிணாம்|
வ்ருத்³த:⁴ குலபதி: ஸூதம்
ப³ஹ் வ்ருச: ஸொ²நகோ ப்³ரவீத்||
- வ்யாஸ உவாச - வ்யாஸர் கூறுகிறார்
- இதி ப்³ருவாணம் - இவ்வாறு சொல்லிய
- ஸூதம் - ஸூத மஹரிஷியை
- ஸம்ஸ் தூய - ஸ்தோத்திரங்கள் செய்து
- ப³ஹ் வ்ருசஸ் - ரிக்வேதியும்
- தீ³ர்க⁴ ஸத்ரிணாம் - தீர்க்க ஸத்ரம் என்ற யாகம் செய்த
- முநீநாம் - மஹரிஷிகளுக்கு எல்லாம்
- குலபதிஸ் - முக்கியமானவரும்
- வ்ருத்³த⁴ஹ் - பெரியோராயும் உள்ள
- ஸொ²நக - சௌநகர் என்றவர்
- ப்³ரவீத் - சொன்னார்
வியாசர் கூறுகிறார் - ஆயிரம் வருடம் வரையில் செய்யப்படும் 'ஸத்ரம்' என்னும் வேள்வியை செய்து கொண்டிருக்கும் முனிவர்களுள் குலபதியாய் விளங்குபவரும், ஞானத்தில் தலைசிறந்தவரும், ருக்வேதம் அத்யயனம் (மறையோதுதல்) செய்தவருமாகிய சௌனக முனிவர், ஸூத புராணிகர் சொன்னதைக் கேட்டு, அவரை வாழ்த்தி பின்வருமாறு கூறலானார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment